திமுக காங்கிரஸ் இடையிலான உச்சகட்ட மோதலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், ஒருவழியாக திமுக காங்கிரஸ் தனது கூட்டணியை இறுதி செய்திருக்கிறது. இதன் பின்னணியில் நடந்த பரபரப்பான சம்பவங்கள் வெளியாகிறது. குறிப்பாக இறுதிவரை ராகுல் காந்தி இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்கின்ற தகவலும் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி, திருச்சி வேலுச்சாமி போன்ற காங்கிரஸ் முக்கிய புள்ளிகளை ராகுல் காந்தி தான் தூண்டிவிட்டு கலகலத்தை ஏற்படுத்தி வந்த முக்கிய காரணம் காரணம் ராகுல் காந்திக்கு விஜயுடன் கூட்டணி வைப்பது தான் என்கின்ற ஒரே முடிவில் இருந்து வந்தார் ராகுல் காந்தி.

இந்த நிலையில் தொடர்ந்து காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு இடையிலான இழுபறிக்கும் மத்தியில் ஒரு கட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தேவை என்றால் இருங்கள் இல்லையென்றால் வெளியேறுங்கள் என்று நேரடியாக கனிமொழி மூலம் சோனியா காந்திக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். உடனே சோனியா காந்தி மத்திய முன்னாள் அமைச்சர் பா. சிதம்பரத்தை இந்த விஷயத்தை உடனே டீல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.
இதன் பின்பு முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து கூட்டணி குறித்து பேசிய பா சிதம்பரம் 41 தொகுதி 2 ராஜ்யசபா சீட் டெல்லி தலைமை எதிர்பார்க்கிறது என்று கேட்டபோது, அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் இன்றைய அரசியல் களத்தில் எதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள், காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன என்பது உங்களுக்கு தெரியாதா.? கடந்த முறை 25 தொகுதி கொடுத்தோம் இம்முறை ஒரு தொகுதி வேண்டுமானால் உயர்த்தி 26 ஆக தருகிறோம், நீண்ட நாட்களாக எங்களுடன் தோழமைக் கட்சியாக இருப்பதால் ஒரு ராஜ்யசபா சீட்டு தருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த விஷயம் பா சிதம்பரம் மூலம் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரிடமும் சென்று இவர்கிறது. அதே நேரத்தில் பா சிதம்பரத்திடம் தங்களுடைய வேதனையை முதல்வர் மு க ஸ்டாலின் பகிர்ந்து இருக்கிறார், இப்படி முதல்வர் மு க ஸ்டாலின் தன்னிடம் தெரிவித்த வேதனைகளை சோனியா காந்திக்கும் பகிர்ந்திருக்கிறார் பா சிதம்பரம்.
இதனை தொடர்ந்து சீட்டை அதிகரித்து 30 என்று சோனியா காந்தி கேட்க அதனை தொடர்ந்து மீண்டும் பா சிதம்பரம் முதல் மு க ஸ்டாலினை சந்தித்து தொடர்பு கொண்டு பேசியதில் இறுதியாக 28 தொகுதி ஒரு ராஜ்யசபா என்று முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சோனியா காந்தியும் இதற்கு ஓகே சொன்ன நிலையில் ராகுல் காந்தி இதை ஏற்றுக் கொள்ளாமல் 30 குறையாமல் கேளுங்கள் நிச்சயம் கிடைக்கும் என்று பா சிதம்பரத்திடம் பேசி இருக்கிறார்.
ஆனால் பா சிதம்பரமோ 28க்கு மேல் ஒரு தொகுதி கூட இனி என்னால் கேட்டு வாங்க முடியாது , திரும்ப நீங்க முரண்பட்டால் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் தான் உருவாகும் , இதற்கு மேல் உங்கள் இஷ்டம் என்று தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் சோனியாவுக்கு செல்ல உடனே ராகுல் காந்தியை அழைத்து சோனியா கடுமையாக கண்டித்து இருக்கிறார்.
கூட்டணி விவாரத்தில் நீ தலையிடாமல் இரு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தவர் உடனே பா சிதம்பரத்தை தொடர்பு கொண்ட சோனியா காந்தி 28 தொகுதி பிளஸ் ஒரு ராஜ்யசபா விற்கு ஓகே சொல்லி கூட்டணியை இறுதி செய்யுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து பா சிதம்பரம் முதல்வர் மு க ஸ்டாலினை தொடர்பு கொண்டு கூட்டணியை இறுதி செய்திருக்கிறார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

