வாட்ச் விவகாரம் தலைக்கு மேல் போய் விட்டது… மருமகனை காப்பற்ற திமுக தலைமை போட்ட உத்தரவு

0
Follow on Google News

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர் கையில் கட்டியிருக்கும் ரபேஃல் வாட்ச் தமிழக அரசியலில் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த வாட்ச் குறித்து திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சரமாரியான குற்றசாட்டுகளை வைத்தார், அதில் பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரபேஃல் வாட்ச் வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார்.

அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். என செந்தில் பாலாஜி பேசியிருந்தார். இதனை தொடர்ந்து அண்ணாமலை வாட்ச் விவகாரம் திமுக மற்றும் பாஜக இரண்டு தரப்பினர் இடையில் கடும் வார்த்தை போராக மாறியது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ், ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு மேலும் இந்த விவகாரத்தை சூடு பிடிக்க வைத்தார்.

அதில் முதல்வர் முக ஸ்டாலின் மருமகன் சபரீசன் பயன்படுத்தும் வாட்ச் நான்கு கோடி வரை என்றும், அவர் பயன்படுத்தும் ஷு முதல் பெல்ட் வரை அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் விலையையும் பட்டியலிட்டு மாரிதாஸ் வீடியோ வெளியிட்டார். அதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது.

முதல்வர் முக ஸ்டாலின் அவருடைய குடும்பத்தின் சொத்துகள் என்னென்ன? அந்தச் சொத்துகளை எங்கே வைத்துள்ளனர். என்று இதுவரை நமக்கு வந்த விவரங்கள் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுகிறது. முதல்வரில் இருந்து ஆரம்பித்து திமுகவில் இருக்கும் ஒவ்வொரு எம்எல்ஏவுக்கு தனித்தனி சொத்துப்பட்டியல் வெளியிடப்படும்.திமுகவின் அமைச்சர்கள், பினாமிகள் மற்றும் உறவினர்களின் சொத்துப் பட்டியலை வெளியிடப் போகிறேன்.

திமுக புள்ளிகள் இந்தோனேசியாவில் சுரங்கங்கள் வைத்துள்ளனர்.மேலும் இந்தோனேசியாவில் சொந்தமாக ஒரு துறைமுகம் வைத்துள்ளார்கள். முதல்வர் மகன் லெக்சஸ் கார் வாங்கி, வரி கட்டாமல் இந்தியாவிற்குள் கொண்டுவந்த போது சிபிஐ வழக்குப் பதிவு செய்தனர். முதல்வருக்கும், அவரது மகனுக்கு எதிராக சிபிஐயில் கொடுத்த சாட்சி ஆவணங்கள் என அனைத்தும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.

இந்நிலையில் அண்ணாமலை வாட்ச் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து குறிப்பாக முதல்வர் முக ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறி வைக்க படுவதை அறிந்த முதல்வர் குடும்பம், இந்த விவகாரம் தலைக்கு மேல் சென்று விட்டது, இதை ஊதி பெரிதாக்கினால், நமக்கு தான் ஆபத்து என அண்ணாமலை வாட்ச் விவகாரத்தை பற்றி இனி யாரும் பேச வேண்டாம் என தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தான் திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி, தனது சமூக வலைதள பக்கத்தில் ராகுல் காந்தியின் டி-சர்ட்டை வைத்து அரசியல் செய்த பாஜக-வினர்போல்,வாட்ச்சை வைத்து இழிவான அரசியல் செய்யும் நோக்கம் திமுக-வினருக்கு இல்லை என பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.