தந்தையை வைத்து 500 கோடி வியாபாரத்தை கட்சிதமாக முடித்த சௌந்தர்யா… அட கடவுளே.!

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது நடித்து வரும் படம் ஜெயிலர், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, இதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்த அண்ணாத்தே படம் சரிவர போகாத காரணத்தினால், சன் பிக்சர்ஸ் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யும் வகையில் மீண்டும் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கால் சீட் கொடுத்து தற்பொழுது ஜெயிலர் திரைப்படத்தை நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து ரஜினிகாந்த் லைக்கா நிறுவனத்தில் புதிய படம் ஒன்று கமிட் ஆகியுள்ளார். அதற்கு முன்பு லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். ரஜினிகாந்த் லைக்கா நிறுவனத்தில் கால்ஷீட் கொடுப்பதற்கு முன்பே அவருடைய மகள் தன்னுடைய படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதற்கு டீல் பேசியதாகவும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் ஐஸ்வர்யா இயக்கும் தயாரிக்க லைக்கா தயக்கம் காட்டி வந்துள்ளது, பின்பு ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலாக நடிப்பதாக சொன்ன பின்பு அந்த படத்தை தயாரிக்க ஒப்பு கொண்டது லைக்கா நிறுவனம். ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இளைய மகள் இருவருக்கும் தொழில் ரீதியாக போட்டி இருக்கும், அதாவது தந்தையை வைத்து மூத்த மகள் ஒரு காரியம் சாதித்தால் இளையமகள் சௌந்தர்யாவும் ஒரு காரியம் சாதிக்காமல் விட மாட்டார்.

இப்படி இருவருக்கும் கடும் போட்டி இருக்கும், அந்த வகையில் ரஜினிகாந்தை வைத்து சௌந்தர்யா அனிமேஷன் படம் எடுத்தால், அடுத்து தன்னுடைய கணவர் தயாரிப்பில் காலா படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைத்தார் ஐஸ்வர்யா. மூத்த மகள் இயக்குனராக படம் எடுத்தால், இளைய மகளும் இயக்குனராக ஒரு படம் எடுப்பார், இப்படி இருவருக்கும் ஒரு வித போட்டி இருந்து வருகிறது.

இந்நிலையில் தந்தையின் செல்வாக்கை வைத்து லைக்கா தயாரிப்பில் மூத்த மகள் சௌந்தர்யா ஒரு படம் இயக்க இருக்கையில், இளைய மகள் அவருடைய கணவருக்கு சொந்தமான ஒரு மருந்து கம்பெனிகளில் இருந்து சுமார் 500 கோடி ரூபாய்க்கு மருந்து கொள்முதல் செய்வதற்கான தொழில் ரீதியாக ஒரு ஒப்பந்தத்தை லைக்கா நிறுவனத்துடன் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் லைக்கா தயாரிக்கும் படத்தில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்த நிலையில், தற்போது அந்த கதையில் ரஜினிகாந்துக்கு விருப்பமில்லை என்பதால். லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் லைக்கா நிறுவனம் கதை கேட்க லண்டன் அழைத்துள்ளது. இந்த கதையை ரஜினிகாந்த் ஓகே செய்து விட்டால், லைக்கா தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை பிரதீப் ரங்கநாதனுக்கு இயக்கம் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

மணிரத்தினம் மீது லைட் வெளிச்சம்.. இதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா.? மனிதாபிமானம் இல்லையா.?