கல்தா கொடுத்த பிரேமலதா … கடும் அப்செட்டில் முக ஸ்டாலின்… மகிழ்ச்சியில் எடப்பாடி…

0
Follow on Google News

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக – அதிமுக – பாஜக என மும்முனை போட்டி நிலவியது. இதில் தேமுதிக தவிர்த்து சொல்லும்படியாக எந்த கட்சியும் அதிமுக கூட்டணியில் இடம் பெறவில்லை. மேலும் விஜயகாந்த் மறைந்த குறுகிய காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், விஜயகாந்த் மீது மக்களுக்கு இருந்த அனுதாபம் ஒரு அளவுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு கொடுத்தது.

ஆனால் அது தமிழகம் முழுவதும் இல்லை என்றாலும் கூட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அனுதாப ஓட்டுகள் நன்றாகவே கிடைத்தது, இருந்து மிக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார் விஜய பிரபாகரன். இந்நிலையில் தன்னுடைய மகன் விஜய பிரபாகரனை அரசியலில் நிலை நிறுத்த மிக கடுமையாக போராடி வருகிறார் பிரேமலதா விஜயகாந்த்.

அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஒரு ராஜசபா சீட் தருவதாக அதிமுக உறுதியளித்தது, ஆனால் தற்பொழுது ஏமாற்றி விட்டார்கள், என கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தார் பிரேமலதா விஜயகாந்த். இதனை தொடர்ந்து தேமுதிகவுக்கு தென் மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்கு இருக்கும் நிலையில் திமுக தரப்பிலும் வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

அதிமுக தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த நாடளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், திருமங்கலம் சட்டசபை தொகுதியில் மிக பெரிய அளவில் வாக்குகளை பெற்று இருந்தார். இந்நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் திருமங்கலம் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.

ஏற்கனவே TTV தினகரன், மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கும் நிலையில், தென் மாவட்டத்தில் NDA கூட்டணிக்க்கு சரிவை கொடுக்கும் என்கிறது கள நிலவரம் , இந்த நிலையில் தேமுதிக திமுக கூட்டணியில் இடம் பெற்றால், மேலும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு தென் மாவட்டங்களில் சரிவை சந்திக்க நேரிடும் என்பதால், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது அதிமுக.

இருந்தும் திமுக – அதிமுக இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பிரேமலதா விஜயகாந்த், சமிபதியில் மதுரையில் தனியார் மண்டபம் ஒன்றில் அதிமுக முக்கிய தலைவர் ஆர் பி உதயகுமார் உடன் சந்திப்பு நடத்தி இருக்கிறார். சில நிமிடங்கள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது உறுதி அளித்தது போன்று ராஜசபா சீட் ஒன்று தருவதாக அதிமுக தரப்பில் உறுதி அழைத்ததாக கூறப்படுகிறது.

இருந்தும் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கிறது, எங்களுடைய கட்சி நிர்வாகிகளிடம் பேசி முடிவை தெரிவிக்கிறோம் என பிரேமலதா தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே திமுக உடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் பிரேமலதா மறுப்பக்கம் ஆர் பி உதயகுமாரை சந்தித்து அதிமுக உடன் கூட்டணி குறித்து பேசியது முதல்வரை கடும் அப்செட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் தேமுதிக அதிமுக கூட்டணிக்கு வந்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் எடப்பாடி இருப்பதாகவும், ஆனால் , பிரேமலதாவை நம்ப முடியாது கடைசி நேரத்தில் கூட தீடிர் என மாறக்கூடியவர். ஆகையால் அவர் திமுக பக்கம் கூட செல்ல வாய்ப்புள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.