கரூர் சம்பத்துக்கு பின்பு விஜய், அதிமுக – பாஜக உடன் கூட்டம்பி அமைப்பார் என தகவல் வெளியானது, ஆனால் அவர் பாஜக தரப்பில் பவன் கல்யாண் உடனும், காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி உடனும் இரண்டு பக்கமும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே வரும் , தமிழக வெற்றி கழகம் தலைமையில் கூட்டணி அமைத்து தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார் விஜய்.
மேலும் காங்கிரஸ் கட்சியும் திமுகவில் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்றால் விஜய் உடன் கூட்டணிக்கு சென்று விடுவோம் என திமுக தலைமையை மிரட்டி வந்தது. ஆனால் பீகார் தேர்தல் முடிவுக்கு பின்பு காங்கிரஸ் நிலைமை படு மோசமாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்பொழுது காங்கிரஸ் திமுக கூட்டணியில் கிடைக்கும் தொகுதியில் போட்டியிட்டால் காங்கிரஸ் சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்கும்.

ஆனால் விஜய் உடன் கூட்டணி அமைத்து அதிக தொகுதிகளில் போட்டியிட்டால் கூட, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த காங்கிரஸ் டெல்லி தலைமை. விஜய்யிடம் முதலில் அதிமுகவிடம் பேசி பாஜகவை கழட்டி விட்டுட்டு வர செய்யுங்கள், தமிழக வெற்றி கழகம், அதிமுக, காங்கிரஸ் என மெகா கூட்டணி அமைக்கலாம் என விஜய்யிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து அதிமுகவிடம் பேசிய விஜய் தரப்பு, அதிமுக உடன் கூட்டணிக்கு தயார், ஆனால் எங்கள் கொள்கை எதிரியான பாஜகவை விட்டு நீங்கள் வெளியே வர வேண்டும், மேலும் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் இந்த கூட்டணியில் இணைய தயாராக இருப்பதாக விஜய் தரப்பில் பேச அதற்கு அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் விஜய்யை மட்டும் நம்பி கூட்டணி வர மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக மீது சவாரி செய்து கிடைக்கும் எம் எல் ஏ வும் விஜய் பக்கம் போனால் கிடைக்காது, அந்த வகையில் தமிழக வெற்றி கழக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றால் மட்டுமே திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி வருவோம் என காங்கிரஸ் திட்டவட்டமாக விஜய் தரப்பிடம் தெரிவித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து அமித்ஷா தரப்பில் இருந்து அதிமுக தலைமைக்கு ஒரு தகவல் பறந்து இருக்கிறது.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறாது, விஜய் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் வந்து ஆக வேண்டும் அதனால் பொறுமையாக காத்திருங்கள் விஜய் நிச்சயம் கூட்டணிக்கு வருவார் என அமித்ஷாவிடம் இருந்து அதிமுக தலைமைக்கு தகவல் சென்று இருக்கிறது. இந்நிலையில் விஜய் அவருடைய கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
பாஜக இருக்கும் கூட்டணியில் நாம் இடம் பெற கூடாது, தற்பொழுது தமிழக வெற்றி கழகத்திற்கு சிறுபான்மை மக்கள் ஆதரவு மிக பெரிய அளவில் உள்ளது. மேலும் தலித் சமூக மக்களின் ஆதரவு மிக பெரிய அளவில் உள்ளது. இப்படி ஒரு சூழலில் பாஜக இருக்கும் கூட்டணியில் நாம் இடம்பெற்றால், சிறுபாண்மை மக்களின் செல்வாக்கை இழக்க நேரிடும். அதன் பின்பு எதிர்காலத்தில் தமிழக வெற்றி கழகம் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை பெறுவது கடினமாக ஒன்றாக அமைந்து விடும் என விஜய் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜய்க்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் விஜய்க்கு தற்பொழுது இருக்கும் ஒரே சாய்ஸ் அதிமுக – பாஜக கூட்டணி தான் அப்படி இல்லாமல் தனித்து போட்டியிட்டால் கூட திமுக வாக்குகளை தான் விஜய் பிரிப்பார் , அது அதிமுக – பாஜக கூட்டணிக்கு தான் லாபம் என கணக்கு போட்டுள்ளாதாம் டெல்லி பாஜக தலைமை.

