சுற்றி வளைத்த போலீசார்… கைதாகிறார் செந்தில்பாலாஜி… தட்டி தூக்கிய CM விஜய்…

0
Follow on Google News

கடந்த திமுக ஆட்சியில் திமுகவின் கஜானா என்று சொல்லும் அளவிற்கு வலம் வந்தவர் செந்தில் பாலாஜி, குறிப்பாக தன்னுடைய துறையில் இருந்து வரும் வருமானத்தை திமுக முதல் குடும்பத்திற்கு சேர வேண்டிய பணத்தை முழுமையாக கொண்டு சேர்ப்பதில் முதன்மையிடத்தில் இருந்தவர் செந்தில் பாலாஜி என்பதாலேயே திமுகவின் முதன்மை குடும்பத்தின் தீவிர விசுவாசியாக செந்தில் பாலாஜி அறியப்பட்டார்.

எந்த அளவிற்கு அவர் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக வந்தாரோ அதேபோன்று பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் அவரை தற்போது கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கு ஏற்கனவே அமலாக்கத்துறை கைவசம் நிலுவையில் உள்ளது.

அதன் பின்பு கடந்த திமுக ஆட்சியில் அமலாக்கத்துறை சோதனையில் டாஸ்மாக்கில் சுமார் 1000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது, இந்த நிலையில் தற்போது தவெக , ஆட்சிக்கு வந்த பின்பு அவர்கள் திமுக தரப்பில் குறி வைக்கப்பட்ட முதல் நபர் செந்தில் பாலாஜி அந்த வகையில் செந்தில் பாலாஜியின் பழைய வழக்குகளை தூசி தட்டி வருகிறது தவெக அரசு.

ஒரு பக்கம் தவெக அரசு செந்தில் பாலாஜியின் பழைய வழக்குகளை தூசி தட்டிக் கொண்டு செந்தில் பாலாஜியை எப்படியும் சிறையில் தள்ளியே ஆக வேண்டும் கருர் விவகாரத்தில் பழி தீர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு இருக்க, செந்தில் பாலாஜியே தாமாக வந்து வலையில் சிக்கி இருக்கிறார் என்று சொல்லும் வகையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலக்கி வாங்கி அரசை கவிழ்க்கும் வழக்கிலும் செந்தில் பாலாஜியும் அவர் தம்பி அசோக் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் தற்போது முன் ஜாமின் பெற்ற செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி வரும் நிலையில், டாஸ்மார்க் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக தற்பொழுது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு சொந்தமான 40 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை செய்து FIR பதிவு செய்துள்ளது.

இதில் செந்தில் பாலாஜி உட்பட ஏழு பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு ஒன்பது சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் அவர் தொடர்புடைய 40 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றதாகவும் கூறப்படும் நிலையில் செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனுவை விசாரித்த நீதிமன்றம்,

செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது, எதன் அடிப்படையில் முன் ஜாமின் கோரிகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. அந்த வகையில் எந்த நேரத்திலும் செந்தில்பாலாஜி கைது செய்யலாம் என்றும், போலீசாரும் செந்தில்பாலாஜி தப்பித்து விடாமல் மிக தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே அமைச்சர் ஆதவா அர்ஜுனா எங்களுக்கு கரூர் கணக்கு ஒன்று இருக்கிறது, என மறைமுகமாக செந்தில் பாலாஜியை தான் எச்சரிக்கை விடுத்து இருந்தார். முதல்வரும் செந்தில்பாலாஜி இம்முறை தப்பித்து விட கூடாது, தட்டி தூக்கி உள்ளே வைக்க வேண்டும் என அமைச்சர் ஆதவா அர்ஜுனாவிடம் தெரிவித்ததாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here