பியூட்டி பார்லர் To அரசியல்… ஏ வ வேலு அறிமுகம் கிடைத்து எப்படி..? … யார் இந்த மீனா ஜெயக்குமார்…

0
Follow on Google News

திருவண்ணாமலையை பூர்விமாகக் கொண்ட ஜெயக்குமார் சிறு வயதிலே வேலை தேடி கோவைக்கு சென்று இருக்கிறார், அங்கே பால் பூத் வைத்து வியாபாரம் நடத்தி வந்த ஜெயக்குமார், நாளடைவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர், அங்கே கோவை ராமநாதபுரத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த மீனாவை திருமணம் செய்து கொண்டார். பியூட்டி பார்லர் நடத்தி வந்த மீனா ஜெயக்குமார் திமுகவில் பயணித்து வந்தார்.

கோவைக்கு ஒரு முறை திமுக முன்னாள் அமைச்சர் ஏ வ வேலு வந்தபோது, அங்கே திமுக முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமியால், இவரும் திருவண்ணாமலை சேர்ந்தவர்தான் என மீனா ஜெயக்குமாரை ஏ வ வேலுவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார், அதாவது மீனா கணவர் ஜெயக்குமார் திருவண்ணாமலையை சேர்ந்தவர் என்பதால்.

நாளடைவில் ஏ வ வேலுக்கு மிக நெருக்கமானவர் மீனா ஜெயக்குமார் என கோவை திமுகவினரால் அறியப்படும் மீனா ஜெயக்குமார், 2021 திமுக ஆட்சிக்கு வந்த மிகக் குறுகிய காலத்திலேயே கோவை திமுகவில் மிக பிரபலமாக அறியப்பட்டவர் மீனா ஜெயக்குமார், ஒரு கட்டத்தில் அடுத்த கோவை மேயர் வேட்பாளர் நான்தான் என்று தனக்குத்தானே அறிவித்துக் கொண்டு மேயர் தேர்தலுக்கான வேலையையும் தொடங்கினார் மீனா ஜெயக்குமார்.

திமுகவின் மேயர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் முன்பே நான் மேயர் வேட்பாளர் என மீனா ஜெயக்குமார் வேலை செய்ய தொடங்கியது, கோவை திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தினாலும் கூட , ஏவ வேலுவுக்கு மிக நெருக்கமானவர் மீனா ஜெயக்குமார் என்பதால் கோவை மேயர் தொகுதியில் நிச்சயம் சீட் கிடைக்கும் என அவர் பின்னால் திமுகவினரும் அணி திரண்டு வேலை செய்தனர்.

ஆனால் மேயர் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் மீனா ஜெயக்குமார் பெயர் இடம் பெறவில்லை, இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கோவை மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக்கை மேடையிலேயே ஒருமையில் பேசி இவர் தான் தனக்கு வரவேண்டிய மேயர் பொறுப்பை தட்டி விட்டார் என்று மீனா ஜெயக்குமார் கொந்தளிக்க, அதே மேடையில் மீனா ஜெயக்குமார் மற்றும் கார்த்திக் ஆதரவாளர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த விவகாரம் திமுகவினர் மத்தியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது, இதனைத் தொடர்ந்து திமுக தலைமை மீனா ஜெயக்குமாரின் பதவியை பறித்தது, அடுத்த எ வ வேலு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தபோது மீனா ஜெயக்குமார் தொடர்பான இடங்களிலும் ரெய்டு நடைபெற்றது, அப்போதே மீனா ஜெயக்குமார் தான் ஏ வ வேலுவிற்கு பினாமி என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செயலாளராக இருந்து வந்த மீனா ஜெயக்குமார் சமீபத்தில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவிலிருந்து விலகுவதாக கட்சியின் தலைமை மீது தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார், இதனை தொடர்ந்து தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்மீனா ஜெயக்குமார்.

திமுகவில் இருந்த போது பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போன மீனா ஜெயக்குமார், தற்பொழுது தவெக வில் இணைத்துள்ள நிலையில் கோவை மேயர் தேர்தலை குறிவைத்து தவெக வில் இணைந்துள்ளார் மீனா ஜெயக்குமார் என பரவலாக பேசப்பட்டு வந்தாலும் கூட, கட்சியில் சேர்ந்த உடனே மேயர் வேட்பாளராக அறிவித்து விடுமா தவெக என்கிற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here