ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன் என் பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் பேசிய வசனத்தை எழுதியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அந்த வசனத்திற்கு ஏற்ப ஓடினேன் ஓடினேன் சென்னையை விட்டே ஓடினேன் என மு கருணாநிதி மகனும் முன்னாள் முதல்வருமான முக ஸ்டலினை ஓட விட்டு கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய் என்றே சொல்லும் அளவுக்கு அரசியலில் மிக பெரிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்த முக ஸ்டாலின் தற்பொழுது சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் வீட்டிலே முடங்கி இருக்கிறார், அவ்வப்போது கல்யாண நிகழ்வுகளில் தங்கள் மனக்குமுறலை கொட்டி வரும் முக ஸ்டாலினை மேலும் உசுப்பேத்தும் வகையில் அமைந்து வருகிறது முதல்வர் விஜய்யின் பேச்சுக்கள்.

அதாவது உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்கை ஜம்முனு இருக்கும் என்று CM விஜய் சினிமாவில் வசனம் பேசி இருப்பார், ஆனால் அரசியலில் அதற்கு நேர்மாறாக திமுகவினரை உசுப்பேத்தி , கடுப்பேத்தி விட்டு, உம்முனு ஜம்முனு இருக்கிறார் முதல்வர் விஜய் என்றே சொல்ல வேண்டும், அந்த வகையில் கடைசியாக சட்டசபையில் முதல்வர் விஜய் பேசிய எங்க அப்பாவா காணோம் என்கிற பேச்சு அமைந்து இருந்தது.
இந்நிலையில் அப்பாவை காணோம் என்று முதல்வர் விஜய் பேசிய பேச்சுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் முக ஸ்டாலின் சட்டசபைக்கு செல்ல வேண்டும், அதற்கு வரும் இடைதேர்தலில் அவரை போட்டியிட செய்ய வேண்டும் என முக ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார்கள் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தற்பொழுது காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் எதாவது ஒரு தொகுதியில் முக ஸ்டாலினை போட்டியிட வைக்கலாம் என்றால் அதற்க்கு காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளில் எதுவுமே திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்கிற சூழல் தான் உருவாகி இருக்கிறது, அந்த வகையில் திருச்சி கிழக்கு தொகுதியில் முக ஸ்டாலின் போட்டியிடுவார் என செய்திகள் வெளியான நிலையில் அதெல்லாம் சரிப்பட்டு வராது என பின்வாங்கி இருக்கிறதாம் திமுக.
இதனை தொடர்ந்து துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு தாமாக முன்வந்து , நான் ராஜினாமா செய்கிறேன், தலைவர் இந்த தொகுதியில் போட்டியிடட்டும் வெற்றி பெற்று அவரை சட்டசபைக்கு அனுப்ப வேண்டியது என்னுடைய கடமை என முதல்வர் குடும்பத்திடம் தெரிவிக்க, நீங்கள் தானே சட்டசபை தேர்தலுக்கு முன்பு கொளத்தூர் தொகுதியில் எளிதாக வெற்றி பெற்று விடலாம், அதனால் தொகுதி மாற வேண்டாம் என்று சொன்னது என பதிலுக்கு சேகர் பாபுவுக்கு செம்ம டோஸ் விழுந்து இருக்கிறார் முக ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து.
இதனை தொடர்ந்து சென்னையே வேண்டாம், திருவாரூர் தொகுதியில் பூண்டி கலைவாணரை ராஜினாமா செய்ய வைத்து விட்டு அங்கே முக ஸ்டாலின் போட்டியிடட்டும் , டெல்டா பகுதியில் விஜய்க்கு பெருசா செல்வாக்கு இல்லை அதனால் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே சரியாக இருக்கும், மற்ற படி சென்னை இனி நமக்கு செட் ஆகாது என்று முடிவு செய்துள்ளதாம் முக ஸ்டலைன் குடும்பம்.
அந்த வகையில் ஒரு காலத்தில் சென்னை எங்கள் கோட்டை என்று கொக்கரித்து கொண்டிருந்த திமுகவை தற்பொழுது ஓடு ஓடு ஓடு ஓடு… ஓடு… ஓடு… வாரான் பாரு வேட்டைக்காரன்” என்பது போன்று சென்னையை விட்டு மொத்த திமுக கூடாரத்தையும் ஓட ஓட விரட்டி கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய்.

