TVK வில் இணைகிறார் OPS … MLA பதவி ராஜினாமா… கடும் அப்செட்டில் முக ஸ்டாலின்…

0
Follow on Google News

முன்னாள் முதலமைச்சர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று மிக உயரிய பதவி வகித்த ஓபிஎஸ், தமிழகத்தில் தற்பொழுது இருக்கும் மூத்த அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர், அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் வெளியேறிய பின்பு கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு செங்கோட்டையனை பின்பற்றி அவர் தாவெகாவில் தான் இணைவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

குறிப்பாக ஓபிஎஸ் மகன் ரவிந்த்ரநாத் விருப்பம் கூட தாவெகாவில் இணைவது தான் என்பதாக அப்போது இருந்திருக்கிறது. ஆனால் திமுக தொடர்ந்து ஓபிஎஸ்யிடம் தங்கள் பக்கம் வருவதற்கு பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது. எப்படி ஓபிஎஸ் இடம் திமுக பேச்சுவார்த்தை நடத்தியதோ அதேபோன்றுதான் செங்கோட்டையனிடமும் திமுக தரப்பிலிருந்து தவெகாவிற்கு செல்லாதீர்கள்,

திமுகவிற்கு வாருங்கள் என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, ஆனால் செங்கோட்டையன் தவெக வில் இணைவதில் உறுதியாக இருந்து, தன்னை தவெக வில் இணைத்துக்கொண்டார். ஆனால் ஓபிஎஸ் திமுக மீண்டும் ஆட்சி அமைத்து விடும் என்கிற நம்பிக்கையில் திமுக பக்கம் சென்றார்.

இந்த நிலையில் தற்போது உள்ள தமிழக அரசியல் சூழலில் ஓபிஎஸ் மகன் தன்னுடைய தந்தையிடம் தவெக பக்கம் செல்வது குறித்து பேசி இருக்கிறார், அதற்கு ஓபிஎஸ்ஸும் ஓகே செல்ல, உடனே ஓபிஎஸ் தரப்பில் இருந்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள் , அதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா விடமும் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

இதில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ அர்ஜுனா ஆகிய இருவரும் முதல்வர் விஜயிடம் இது குறித்து பேச, விஜய்யும் அதற்கு க்ரீன் சிக்னல் காட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, தற்பொழுது தென் மாவட்டத்தில் பெயர் சொல்லும் படி மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு அரசியல் முகம் தவெக வில் இல்லை, அந்த வகையில் தற்பொழுது ஓபிஎஸ் தவெக விற்கு வரும் பட்சத்தில்,தென்மாவட்டத்தின் முகமாக ஓபிஎஸ் அறியப்படுவார்.

மேலும் அவர் ஒரு முன்னாள் முதலமைச்சர் என்பதால் அவருக்கான உரிய அங்கீகாரமும் தவெகவில் கொடுக்கப்படும், இந்த நிலையில் தன்னுடைய எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு விரைவில் தவெகவில் ஓபிஎஸ் இணை இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது, அடுத்து வர இருக்கும் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தற்பொழுது எம்.எல்.ஏ அவருக்கும் அதே சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட இருக்கிறார்.

அடுத்து 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தவெக சார்பில் போட்டியிடுவார் என்றும் தவெக தரப்பில் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து தவெக வில் இணைந்து வந்த நிலையில், தற்போது திமுகவிலிருந்து ஒரு எம்எல்ஏ ராஜனாமா செய்து தவெக வில் இணைய இருப்பது மு க ஸ்டாலினை மிகப்பெரிய அப்செட்டில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓபிஎஸ் தவெக வில் இணைய இருப்பது குறித்த தகவல் அறிந்த முக ஸ்டாலின் அவரிடம் மூத்த திமுக நிர்வாகி ஒருவரை அனுப்பி பேசி சமாதானம் செய்ய வலியுறுத்தி இருக்கிறார், ஆனால் ஓபிஎஸ் பிடி கொடுக்காமல் பேசி வருவதாகவும், மேலும் நான் இன்னும் எந்த முடிவும் எடுக்க வில்லை என்று திமுக தரப்பில் தெரிவித்து விட்டு தொடர்ந்து தவெகவில் தொடர்பில் தான் இருந்து வருகிறாராம் ஓபிஎஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here