3,00,000.00 கோடி ஊழல்… சிக்கிய Hard Disk … செந்தில்பாலாஜியால் சிக்கும் உதயநிதி…

0
Follow on Google News

முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 45 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 35க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாவும், அதில் ஹார்ட் டிஸ்க் ஒன்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் கைவசம் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த செந்தில் பாலாஜி அறையிலையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் வலதுகரமாக கூறப்படும் கார்த்திக் என்பவர் சமீபத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசியதாக அவர் மீது பதியப்பட்ட வழக்கில் ஜாமின் கிடைக்கப்பெற்றது, இதனை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தவெக எம்எல்ஏ களிடம் பேரம் பேசிய தொடர்பாக என்று பரவலாக பேசப்பட்ட நிலையில்,

அதற்காக அல்ல பழைய டாஸ்மாக் வழக்குகளை தூசி தட்டி செந்தில் பாலாஜியை லாக் செய்யத்தான் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது, குறிப்பாக டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஏ1 குற்றவாளியாக செந்தில் பாலாஜி, ஏ2 குற்றவாளியாக டாஸ்மாக் அதிகாரி விசாகன், ஏ3 முன்னாள் டாஸ்மாக் அதிகாரி, a4 உதயநிதியின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்,

அதற்கு அடுத்தபடியாக செந்தில் பாலாஜியின் வலதுகரமான கார்த்திகை அந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செந்தில் பாலாஜி தொடர்பான இடங்கள் மட்டுமின்றி கும்மிடிப்பூண்டியில் டாஸ்மாக் சரக்கு பாட்டில் தயாரிக்கும் நிறுவனம், மற்றும் டி ஆர் பாலுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றிருக்கிறது.

இந்த நிலையில் தற்பொழுது பல திடுக்கிடும் ஆதாரங்களை கண்டுபிடித்து இருக்கிறது தவெக அரசு. அதாவது கடந்த திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்த திமுக அரசு, அதில் 284 கடைகளை அடைக்காமலேயே லைசன்ஸ் இல்லாமையே சரக்குகளை விற்று வந்ததை தவெக அரசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சப்ளை முறையிலையும் முறைகேடு நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, உயர் ரக பாட்டில்களுக்கு 100 முதல் 500 ரூபாய் வரையும் சாதாரண டாஸ்மாக் பாட்டில்களுக்கு 10 முதல் 100 ரூபாய் வரையும் முறைகேடு கடந்த திமுக ஆட்சியில் நடந்ததாக தாவேக அரசு கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வருடத்திற்கு அரசாங்கத்திற்கு 40 ஆயிரம் கோடி வருவாய் என்றால் 60 ஆயிரம் கோடி அரசுக்கு கணக்கு காட்டாமல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும்,

சுமார் ஐந்து வருட திமுக ஆட்சியில் குறைந்தது டாஸ்மாக் மூலம் மட்டும் மூன்று லட்சம் கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என்று தவெக அரசு கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இதனால் இந்த முறைகேட்டில் பின்னணியில் இருக்கும் கரூர் கேங்கை மொத்தமாக தூக்கும் வகையில் டாஸ்மாக் அலுவலகம் அமைந்துள்ள நான்காவது மாடியில் சில முக்கிய ஆவணங்களை தவெக அரசு பார்வைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ஒரு பக்கம் செந்தில் பாலாஜியின் வலதுகரமான கார்த்திக் இந்த விவகாரத்தில் சிக்கி இருப்பதும், மறுபக்கம் உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நண்பரான ரத்தீசும் சிக்கியிருக்கிறார், அந்த வகையில் செந்தில் பாலாஜி மூலம் நிச்சயம் உதயநிதி வசமாக சிக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று பரபரப்பாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here