2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், திமுகவின் முக்கிய அமைச்சர்களும் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமலாக்கத்துறை ரேடரில் மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் திமுகவைச் சேர்ந்த சுமார் 13 அமைச்சர்களும், 7 திமுக எம்பி களும் அமலாக்கத்துறை வலையில் வலுவாக சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அடுத்தடுத்து அமலாக்க துறையின் நடவடிக்கைகள் அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் ஆபரேஷன் தமிழ்நாடு பொருத்தவரை இடையில் சமரசம் பேசி முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்பே இல்லை. ஆபரேஷன் சக்சஸ் ஆகும் வரை இதில் சமரசமும் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

அதாவது வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்காக தான் ஆபரேஷன் தமிழ்நாடு என்று பெயரிட்டு ஒரு பக்கம் திமுகவுக்கு எதிராக கூட்டணியை வலுவாக அமைப்பது, இன்னொரு பக்கம் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள திமுகவினரை சிறைக்கு அனுப்புவது, இதுதான் டெல்லி பாஜகவின் ஆப்ரேஷன் தமிழ்நாடு என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா மட்டுமல்ல டெல்லி பாஜக தலைமைக்கு உதயநிதி ஸ்டாலின் மீது கடும் கோபம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் பாஜகவின் உயிர் மூச்சு என சொல்லக்கூடிய சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய சர்ச்சை கூறிய பேச்சு தான் என்கிறது டெல்லி வட்டாரங்கள். அதாவது சனாதனம் டெங்கு, மலேரியா போன்றது, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியது இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது.
இது பிரதமர் மோடி மற்றும் அமித் ஆகிய இருவருக்குமே உதயநிதி ஸ்டாலின் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது, அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு தக்க பாடம் புகட்ட சமயம் பார்த்து காத்திருந்தனர் அமித்ஷா மற்றும் மோடி இருவரும், அந்த வகையில் தற்பொழுது டாஸ்மாக் ஊழல் வழக்கில் உதயநிதி ஸ்டாலின் சிக்கி உள்ளார்.
ஏற்கனவே சனாதனம் குறித்து சர்ச்சை கூறிய வகையில் பேசிய உதயநிதிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய நேரம் இதுதான் என்று உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளது டெல்லி பாஜக தலைமை. அந்த வகையில் அடுத்த இரண்டு மாதத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் தன் மகனை காப்பாற்ற மோடியுடன் நடந்த சமரச முயற்சி தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் ஆதரவுடன் மத்திய பாஜக ஆட்சி அமைத்து வரும் நிலையில், ஒருவேளை சந்திரபாபு நாயுடு , நிதிஷ்குமார் ஆகிய இருவரில் ஒருவர் பாஜக கூட்டணியில் இருந்து ஆதரவை வாபஸ் வாங்கி விட்டால் திமுக ஆதரவு தயார், டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் உதயநிதி மீது கை வைக்க வேண்டாம் என திமுக தரப்பில் சமரச பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று கூறுகிறது டெல்லி வட்டாரங்கள்.
காரணம் பாஜக காங்கிரஸ் கூட்டணியை உடைத்து அதிலிருந்து சரத்பவார் வெளியேறி பாஜகவுக்கு ஆதரவு கொடுக்க ரெடியாகிவிட்டார், ஆகையால் திமுகவுக்கு எல்லா பக்கமும் பாஜக கேட் போட்டுவிட்டது என்று கூறப்படுகிறது. குறிப்பாக திமுகவே தானாக வந்து பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தால் தேவையில்லை என்கிற மனநிலையில் தான் பாஜக உள்ளது . அந்த வகையில் விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமலாக்க துறை மூலம் கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகிறது.

