தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், தமிழக தேர்தல் களம் அனல் பிடித்து வருகிறது, திமுக கூட்டணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என களம் இறங்கிய டெல்லி பாஜக தலைமை, முதலில் அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்தது, அடுத்து விஜய் – சீமான் இவர்கள் இருவருடைய நிலை என்ன என்கிற கேள்விக்கும் விடை கிடைத்துள்ளது.
சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அளித்த பேட்டியில், திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றுதான் அதிமுக தேர்தலை அணுகுகிறது. அதே கருத்துடன் தான் அன்பு சகோதரர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் கூட்டணி இறுதிவடிவம் பெறும் என தெரிவித்து இருந்தார்.
அதே போன்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், திமுகவை வீழ்த்த தவெக உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். விஜய் இணைய வேண்டும் என்ற கடம்பூர் ராஜூவின் கருத்தை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதிமுகவை தொடர்ந்து பாஜக தரப்பிலும் விஜய்-ஐ கூட்டணிக்கு வரவேற்று இருப்பது பற்றி டெல்லி வட்டாரங்களில் விசாரித்ததில் பல தகவல் வெளியாகியுள்ளது.
அமித் ஷாவின் அரசியல் ராஜதந்திரம் என்பது அவர் போடும் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றி விடுவார் என்பது தான் அவருடைய அரசியல் வரலாறு. அந்த வகையில் உத்தர பிரதேசம், திரிபுரா, டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில் அமித் ஷாவின் திட்டம் தான் அங்கே ஆட்சி மாற்றமும் பாஜக அரியணை ஏறவும் காரணமாக இருந்தது.
குறிப்பாக ஹரியானாவில் லால் குடும்பத்தையும், மகாராஷ்டிராவில் சரத்பவர் இவர்களை ஆட்டம் காண வைத்தவர் அமித்ஷா, இதில் சரத்பவார் கட்சி விரைவில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக கூட்டணியில் இணைய இருப்பதை உறுதி செய்கிறது டெல்லி வட்டாரங்கள். இந்நிலையில் தற்பொழுது தமிழ்நாட்டுப் பக்கம் தன்னுடைய முழு கவனத்தையும் திருப்பி வரும் அமித்ஷா,
திமுகவுக்கு எதிரான வாக்குகள் எந்த விதத்திலும் சிதற விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார், அதற்காகத்தான் அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் உள்ளே கொண்டு வந்த அமித்ஷா. அடுத்ததாக நடிகர் விஜய் மற்றும் சீமான் ஆகியோரையும் இந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு ஆன முயற்சிகள் தொடர்ந்து அமித்சா ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் தொடர்ந்து பாஜகவுடன் நடிகர் விஜய் மற்றும் சீமான் இவர்கள் இருவருமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி செய்கிறது. இந்த நிலையில் அடுத்த இரண்டு மாதத்தில் அமித்ஷாவின் பார்முலா கை கொடுக்கும் என்றும், அந்த வகையில் நடிகர் விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவரும் ஓட்டை பிரிப்பதால் இருவருக்குமே எந்த பலனும் இல்லை.
இதில் குறிப்பாக விஜய் – சீமான் இருவரும் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினால் இவருடைய எதிர்காலம் மிக பெரிய கேள்விக்குறியாகி விட்டு, அதே நேரத்தில் 8 கோடி தமிழர்களை காப்பாற்ற திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் சிதறாமல் இருக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் நடிகர் விஜய் மற்றும் சீமான் இருவருமே கை கோரக்க தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில், ஒரே மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் விஜய் – சீமான் கைகோர்ப்பார்கள் என்றும் இதற்கான வியூகத்தை அமித்ஷா வகுத்து விட்டார் இது அடுத்த இரண்டு மாதத்தில் அரங்கேறும் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

