அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவியா.? முக ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர் கொடி.!

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அடுத்த மாதம் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக இரண்டு கூட்டணி கட்சிகளும் வெற்றி தங்களுக்கு தான் என்கிற நம்பிக்கையில் இரண்டு கூட்டணி காட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அவர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவின் போது, குடும்பத்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் வாக்களித்து விட்டு, அன்று மட்டும் மூன்று முறை திமுக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை நேரில் சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்து பேசியுள்ளார், திமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் சென்னையில் வாக்கு பதிவு முக குறைந்த அளவில் பதிவாகியுள்ளது திமுகவுக்கான வாக்குகள் குறையலாம் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து சந்திப்பின் போது, இறுதியில் திமுக ஆட்சி தான் என ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டு மேற்கு வங்காளம் தேர்தல் பணிகளை கவனிக்க மேற்கு வங்கம் பறந்துவிட்டார், இதனை தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் ரிப்போர்ட் நம்பி, திமுக மந்திரிசபை அமைக்கும் பணியில் முக ஸ்டாலின் குடும்பத்தினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, இதில் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களை அமைச்சரவையில் இடம்பெற செய்வதில் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்பு திமுகவில் இணைந்து தற்போது போடி தொகுதியில் போட்டியிடும் தங்க தமிழ் செல்வன், அதே போன்று கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இவரை தொடர்ந்து அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர், துறைமுகம் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சேகர் பாபு மற்றும் ஏ,வ.வேலு போன்றோர் பெயர்களும் திமுக மந்திரி சபை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் திமுக மூத்த நிர்வாகிகள், மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் வெற்றி பெற்று அமைச்சர் கனவில் இருக்கும் அவர்களுடைய பெயர்கள் மந்திரி சபை பட்டியலில் இடம்பெறவில்லை என்கிற தகவல் அவர்களுக்கு சென்றுள்ளது, இதை கேள்விப்பட்ட திமுக மூத்த நிர்வாகிகள், அதிமுகவில் இருந்து வந்த மற்றவர்களுக்கு வந்த உடனே அமைச்சர் பதவியை தூக்கி கொடுத்தால் இத்தனை வருடமாக கட்சியில் உழைத்த எங்களுக்கு என்ன மரியாதை என திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எதிராக அதிருப்தியில் இருப்பதாகவும், இந்த அதிருப்தி நாளடைவில் திமுக தலைவருக்கு எதிராக போர் கொடி தூக்கும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.