கல்விக் கடனுக்காக மோசடிக் கும்பலிடம் சிக்கிய மாணவி..! கடைசியில் தற்கொலையில் முடிந்தது…

0
Follow on Google News

மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்வி பயில கடன் வாங்க கடைசியில் மோசடி கும்பலிடம் சிக்கி தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தேவி நகரில் பெற்றோர்களுடன் வசித்து வந்தார் மாணவி தாரணி. தந்தை இறந்த பிறகு தாய் தான் தாரணியை படிக்க வைத்துள்ளார். கடந்த 2019 ஆண்டு தாரணி உயர் கல்வி தேர்ச்சி பெற்றார்.

உயர் கல்வியில் தேர்ச்சி பெற்ற தாரணிக்கு சட்ட கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டு அதற்கு விண்ணப்பதாரர். ஆனால் தாரணிக்கு சீட் கிடைக்கவில்லை. விரக்தியடைந்த தாரணி கிடைத்த படிப்பை படிக்க முடிவு செய்தார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ICAT கல்லூரியில் B.sc பேஷன் டிசைனர் படிக்க விண்ணப்பித்துள்ளார். B.sc பேஷன் டிசைனர் படிக்க 2லட்சம் கல்வி ஆகும் என்பதால், தாயிடம் கேட்டு அவரை தொந்தரவு செய்யாமல் தாரணி கல்விக் கடன் வாங்க முயற்சித்தார்.

அப்போது தான் தாரணி கல்விக் கடன் பெறுவதற்கான வேலையில் ஈடுபட்டிருந்த போது, சமூக வலைத்தளத்தில் கடன் பெற்று தரும் ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தை தாரணி பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டு 2லட்சம் கல்விக்கடனுக்கான தேவைகளை கூறியுள்ளார். ஆனால் தான் பேசுவது மோசடி கும்பல் என்று தாரணிக்கு அப்போது தெரியவில்லை.

அந்தத் தனியார் பைனான்ஸ் நிறுவனம் காரனுக்கு 3 லட்சத்திற்கும் மேல் கல்விக் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியது. இவ்வளவு பெரிய தொகைக்கு பரிவர்த்தனை கட்டணம் செலுத்தினால் தான் கடன் வழங்கப்படும் என்று தாரணியிடம் கூறியது. அவர்கள் சொன்னதை தாரணியும் 76,600 ரூபாய் இரண்டு கட்டமாக செலுத்தியுள்ளார். முதல் கட்டமாக 50,000 ரூபாயும், இரண்டாம் கட்டமாக 26,600 ரூபாயும் செலுத்தியுள்ளார். இரண்டாவது கட்டமாக செலுத்தப்பட்ட 26,600 ரூபாய் தனது தாயின் தங்கச்சங்கிலியை அடகு வைத்துதான் கட்டியுள்ளார்.

காரணம் இடம் பணம் பெற்ற தனியார் பைனான்ஸ் மோசடி கும்பல் தங்கள் மோசடி வேலையை காட்டியது. அவர்கள் கேட்ட பணத்தை கட்டியது தாரணி அவர்கள் செல்போன் அழைப்பை தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. தாரணிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்த மோசடியை பற்றி தாரணி நண்பர்களிடம் சொல்லி புலம்பியுள்ளார். தனது தாயிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். கடைசியில் தாய் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாரணி தற்கொலை அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போனில்இன்டர்நெட் இருந்தால் போதும் உலகத்தையும் அதனுள் பார்த்து மகிழலாம்.

ஆனால் எந்தஅளவிற்கு அதிக நன்மை இருக்கிறதோ அந்த அளவிற்கு தீமைகள் மறைந்து இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய விளம்பரத்தைப் பார்த்து இனியாவது ஏமாறாமல் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூக வலைத்தளத்தில் வரக்கூடிய விளம்பரத்தைப் பார்த்து பணம் பரிவர்த்தனைகளை செய்வதை தவிர்ப்பது நன்று. மீண்டும் ஒரு தாரணியை இழந்து விடக்கூடாது.