அம்மாவின் கனவை நினைவாக்க மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க ஒன்றுபடுவோம்.! வெளியாகிறது சசிகலா அறிக்கை.! தினகரன் கதி என்னவாகும்.?

0
Follow on Google News

சசிகலா சிறையில் இருந்து வந்தால், அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவை நேரில் சென்று சந்திப்பார்கள், தமிழக அரசியலில் மாற்றம் வரும் என எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, சசிகலா சிறைக்கு சென்ற பின்பு TTV தினகரனின் நடவடிக்கைகள் எதுவும் அவருக்கு பிடிக்கவில்லை, குறிப்பாக TTV தினகரன் ஆர்.கே.நகர் இடை தேர்தலில் போட்டியிட்டது, அவர் தனியாக புதிய கட்சி தொடங்கியது என சசிகலா விருப்பம் இல்லாமல் தான் அரங்கேறி வந்துள்ளது.

இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்ததில் இருந்து தினகரன் மற்றும் அவருடைய அமமுக கட்சியை கண்டு கொள்ளவில்லை, வரும் சட்டசபை தேர்தலில் சசிகலாவை முன்னிருந்தி தனது தலைமையில் மூன்றாவது அணி அமைக்கலாம் என கனவில் இருந்து தினகரனின் திட்டத்துக்கு உடன்படவில்லை சசிகலா, இதற்கு காரணம் சசிகலா குடும்பத்துக்குள் நடக்கும் அவர்களின் குடும்ப பிரச்சனையும் ஒரு காரணம் என கூறபடுகிறது.

தனது குடும்ப உறுப்பினரான திவாகரன், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, விவேக் ஜெயராமன் என யாரையும் அரவணைத்து செல்லாமல் தன்னிச்சையாக செயலப்பட்டு வருகிறார் தினகரன், அதனால் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து சசிகலா சிறையில் இருக்கும் போதே அவரை சந்தித்து தினகரன் பற்றி புகார் தெரிவித்துள்ளார்கள், மேலும் அதிமுகவில் இருக்கும் அமைச்சர்கள் உட்பட அனைவரும் நமக்கு மரியாதை தரும் விதத்தில் தான் உள்ளனர் ஆனால் தினகரனின் நடவடிக்கை தான் தவறாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தினகரன் மீது அதிருப்தியில் இருந்து வரும் சசிகலா அதை பொது வெளியில் வெளிப்படுத்தாமல் இருந்து வருகிறார், இந்நிலையில் அதிமுக மீதும் முதல்வர் பழனிசாமி, துணை முதலவர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தினகரனை விமர்சனம் செய்தாலும், தன்னை எந்த ஒரு இடத்திலும் இது வரை விமர்சனம் செய்யவில்லை என்பதை உணர்ந்த சசிகலா அவர்கள் மீது உள்ள தனது பாசத்தை தன்னை சந்திக்க வந்த சிலரிடம் எதுத்து கூறியுள்ளார்.

இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் விருப்பமாக இருக்கிறார் சசிகலா, ஜெயலலிதாவுக்கு எப்படி உதவியாக இருந்தாரோ அதே போன்று வரும் தேர்தலில் தன்னுடைய ஆதரவு அதிமுகவுக்கு தேவை படும் பட்சத்தில், திமுகவை வீழ்த்த அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க பிரிந்து இருப்பவர்களை ஒன்றிணைக்கும் வகையில் அறிக்கையினை விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தினகரன் அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட முடிவு என்ன என்பது தான் மர்மமாக உள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .