7 லட்சம் பேர் பார்த்து உள்ள பிரண்ட்ஷிப் பட டீஸர்… பட்டையை கிளப்பும் ஹர்பஜன்சிங் .

0
Follow on Google News

சமீப காலமாகவே கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை திரைப்படமாக இயக்கப்பட்டு வெளிவந்தது. ஆனால் இப்போது மிக பெரிய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடித்து வெளிவர காத்திருக்கும் பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் டீசர் லஹரி மியூசிக் யூடியூப் மூலம் வெளியிடப்பட்டு ஒரு நாளில் 7லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இயக்குனர் ஜான் பவுல்ராஜ், ஷாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன், லாஸ்லியா நடித்துள்ளனர்.

நடிகர் ஹர்பஜன் சிங்க்கு தமிழில் இது முதல் திரைப்படம் என்பதால் புதிய அனுபவமாக இருக்கும். இந்தப் திரைபபடத்தின் மூலம் தமிழ் பட வாய்ப்புகளை அல்லி செல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள ப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தின் டீசரில் நல்ல ஆக்சன் லுக்கில் வெளிப்படுத்தியுள்ளார். டீசரில் கல்லூரி படிக்கும் மாணவர் போன்ற தோற்றத்தில் களமிறங்குகிறார்.

பிக் பாஸ் 3ல் சென்ற லாஸ்லியா தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகி. டீசரில் லாஸ்லியா செம லுக்கு போங்க… அழகில் தேவதை பேன்ற தேற்றம்…! ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளதால் இந்தப் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் உள்ளது.