நடிகர் அஜித்தின் வலிமை பட அப்டேட். இன்ஸ்டா லைவ்வில் என்ன சொன்னார் யுவன் சங்கர் ராஜா..!

0
Follow on Google News

தல ரசிகர்களில் நீண்ட கால கோரிக்கை விரைவில் நிறைவேற போகுது. எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்து முடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் தான் வலிமை. வலிமை திரைப்படத்தின் இறுதிகட்ட எடிட்டிங் பணியில் உள்ளது. இதற்கு முன்பு 2019ம் அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய எச். வினோத் தான் வலிமை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

தல ரசிகர்கள் நடிகர் அஜித்தின் படத்திற்காக ஒரு ஆண்டு காத்துக்கிடந்ததே பெரிய விஷயம். வலிமை படத்தின் இயக்குனர் முதல் தயாரிப்பாளர் வரை வலிமை அப்டேட் கேட்டு வந்தனர்,. ஆனால் அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. கடந்த சில வாரங்கள் முன்பு தமிழக முதல்வர், கிரிக்கெட் பிளேயர் அலி, பிரதமர் மோடி வரை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்களின் செயல் நடிகர் அஜித் குமாரை சங்கடத்தில் ஆழ்த்தியது. நடிகர் அஜித்தின் அப்டேட் வந்த பிறகு தான் ரசிகர்கள் அடங்கினர்.

இன்று இன்ஸ்டாகிராமில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா லைவ்வில் பேசும் போது வலிமை படத்திற்கான போஸ்டர், பாடல், மூவி பிரமோஷனுக்கான வேலை நடைபெற்று வருவதால் விரைவில் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்தார், மேலும் வலிமை அப்டேட் குறித்து ஏதவாதுயுவன் பேசுவார் என எதிர்பார்த்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, இதற்கு இடையில் நடிகர் அஜித் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களால் வைரல் ஆகியுள்ளது.