கருணாநிதி பார்முலா… ஆறு வரியில் திமுக மற்றும் ஊடகங்களை துவம்சம் செய்த பேராசிரியர்..!

0
Follow on Google News

மிக நீண்ட காலம் திமுக தலைவராக இருந்த மறைந்த முன்னால் முதல்வர் கருணாநிதியின் அரசியல் மற்ற அரசியல் தலைவரை விட சற்று வித்தியாசமானதாக இருக்கும், முரசொலியில் திமுக உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவதும், எதிரே இருப்பவர்களை கவிதையாக வெளியிட்டு மிக கடுமையாக விமர்சனம் செய்வது, என கருணாநிதி அரசியலில் தொடர்ந்து கடைபிடித்து வந்த ஓன்று. தமிழக அரசியலில் நீண்ட காலம் பயணித்தவர்.

2011 சட்டசபை தேர்தலின் போது கருணாநிதி தலைமையிலான திமுகவுக்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத வகையில் தமிழக மக்கள் புறக்கணிக்க, அடுத்து நடந்த 2014 நாடாளுமற்ற தேர்தலில் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் மண்ணை கவ்விய திமுக, 2016 சட்டசபை தேர்தலிலும் தோல்வியை தழுவியது. அடுத்த வருடம் நடந்த ஆர் கே நகர் இடைதேர்தலில் டெபாசிட் இழந்தது திமுக.

இப்படி தன் வாழ்நாளின் இறுதி கட்டத்தில் தோல்வியை மட்டுமே சந்தித்த கருணாநிதி மறைவுக்கு பின் மந்தமாக இருந்த தமிழக அரசியல் களம் தற்போது திமுக மற்றும் பாஜவுக்கான அரசியல் களமாக மாறியுள்ளது. எதிர்கட்சியாகவே செயல்படும் பாஜகவின் தீவிர அரசியில், திமுக ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்துக்குள் ஆளும்கட்சிக்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி அலை உருவாகியுள்ளது என்பது தமிழக அரசியலின் இன்றைய எதார்த்தம்.

இந்நிலையில் திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல கருணாநிதி பாணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ஒரே நாடு பத்திரிகையில் தினமும் கடிதம் எழுதி வருகிறார், இது பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே போன்று தற்போது கருணாநிதி பாணியில் கவிதை மூலம் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

தஞ்சை மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதி கேட்டு இன்று சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில்.

கள்ளத்தனம் செய்யும் திமுக..
கள்ள மவுனம் காக்கும் கட்சிகள்..
கள்ளனை காக்க முனைந்திருக்கும் ஊடகங்கள்..
கண்டித்து உண்ணாநோன்பு கொள்ளும் அண்ணாமலை..
கள்ளமில்லா குழந்தை லாவண்யாவின் மரணத்திற்கு நீதி வகுக்கட்டும்..
மரணத்தின் ரணதிற்கு மருந்தளிக்கட்டும்..

என லாவண்யா மரணம் குறித்து ஆளும் திமுக அரசு, அதன் கூட்டணி கட்சி மற்றும் ஊடகங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையிலும், அதே நேரத்தில் கள்ளமில்லா குழந்தைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உண்ணாவிரதம் நீதி வகுக்கட்டும் என ஆறு வரி கவிதையில் லாவண்யா தற்கொலை மரணம் குறித்த தனது கருத்தை கவிதை வாயிலாக பதிவு செய்துள்ளார் பேராசிரியர்.