சமீபத்தில் பிரதமர் மோடியை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசிய அடுத்த நாள் திமுக எம்பி கனிமொழி தனியாக பிரதமரை சந்தித்து பேசினார். கமல்ஹாசன் – பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு சில நிமிடங்களில் முடிந்தது. ஆனால் பிரதமர் மோடியை கனிமொழி சந்திக்க சென்ற போது அங்கே, இருந்த மற்ற அதிகாரிகள் அனைவரும் வெளியே அனுப்பப்பட்டு, சுமார் 45 நிமிடங்கள் பிரதமர் மோடி மற்றும் கனிமொழி இருவரும் மட்டுமே தனியாக பல விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவில் பல மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி தான் என சென்று கொண்டிருந்த நிலையில், இதற்கு முன்பு ஓரம் கட்டப்பட்டு இருந்தார், ஆனால் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் உதயநிதி பெயர் மிக பெரிய அளவில் பஞ்சராக, மீண்டும் மருமகன் சபரீசனுக்கு முக்கிய துவம் கொடுக்க தொடங்கி இருக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்.

அந்த வகையில் வரும் 2026 சட்டசபை தேர்தலை முழுமையாக மாப்பிளை சபரீசன் கையில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார் முதல்வர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அடுத்த திமுக தலைவர் யார் என்கிற போட்டி உதயநிதி மற்றும் கனிமொழி இருவருக்கும் இடையில் இருந்து கொண்டே தான் உள்ளது. உதயநிதி துணை முதல்வராக அமர்த்தப்பட்ட போது, தென் மண்டல பொறுப்பாளர் பதவி கேட்டார் கனிமொழி, ஆனால் அவருக்கு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் முதல் குடும்பம் கனிமொழியை ஓரம் காட்டினாலும், டெல்லியில் கனிமொழிக்கு பாஜக சார்பில் ராஜமரியாதை கொடுத்து கொண்டிருக்கிறார்கள். மேலும் திமுகவில் இருக்கும் மூத்த தலைவர்களான கே என் நேரு, துரைமுருகன் உட்பட பல தலைவர்கள் கனிமொழிக்கு ஆதரவாகவும் உதயநிதிக்கு எதிராகவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டெல்லியில் கனிமொழிக்கு இருக்கும் லாபி திமுகவில் வேறு யாருக்கும் இல்லை.
இந்நிலையில் திமுக ஆதரவு நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் எடுத்து 2026 தேர்தல் கருத்து கணிப்பில், திமுக கூட்டணி 100 இல் இருந்து 110 தொகுதிகள் தான் வெற்றி பெரும், அதிமுக கூட்டணி 95 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும், சுமார் 35 தொகுதிகள் கடும் இழுபறியில் உள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு சூழலில் திமுகவில் இருந்து ஒரு ஏக் நாத் ஷிண்டே உருவாக்கினால், திமுகவை மீண்டும் ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து விடலாம் என்பது தான் பாஜக டெல்லியில் திட்டமும் கூட என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
அதற்கான வேலையை தான் கனிமொழி மூலம் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் தொடர்ந்து செய்து வருவதாகவும், அந்த வகையில் திமுகவில் கனிமொழி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் முதல் குடும்பத்திற்கு எதிராக பல தகவல்களை பிரதமர் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ள கனிமொழிக்கு திமுகவில் முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் முதல் குடுமபத்திற்கு எதிராக பல நகர்வுகளை பாஜக செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் முதல் குடுமபத்தை பாஜகவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால், அது கனிமொழி மனசு வைத்தால் மட்டுமே முடியும் என்கிற சூழல் முதல் குடும்பத்திற்கு ஏற்பட்டு இருக்கிறது, அந்த வகையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் கனிமொழி பேச்சுக்கு மட்டுமே மதிப்பு தருவதாகவும், திமுகவில் வேறு யாரையும் பொருட்படுத்தவில்லை என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
அந்த வகையில் தற்பொழுது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் உதயநிதியை தற்காலிகமாக காப்பாற்றி வைத்துள்ளதும் கனிமொழி தான் என்றும், அதனால் தான் சமீப காலமாக திமுகவில் கனிமொழிக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது. மேலும் திமுகவுக்கு எதிரான சில அரசியல் நகர்வுகளை கனிமொழி மூலமாக டெல்லி பாஜக நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

