என் மாவட்டத்தில் கனிமொழி ஆட்டம் நடக்காது.! கனிமொழி பின்னால் போனால், உங்களுக்கு இதே நிலைமை தான்.! எச்சரிக்கும் திமுக எம்.எல்.ஏ மூர்த்தி.!

0
Follow on Google News

வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது, 173 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை திமுக நேற்று வெளியிட்டது, அதில் கனிமொழி ஆதரவாளர்கள் பெரும்பாலனவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை, தேர்தலுக்கு முன்பு ஐ-பேக் நிறுவனம் வேட்பாளர் தேர்வு குறித்து தமிழக முழுவதும் நடத்திய ஆய்வில் இடம் பெற்ற கனிமொழி ஆதரவாளர்கள் பெயர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மேலூர், உசிலம்பட்டி, மதுரை தெற்கு ஆகிய மூன்று தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய திமுக, மற்ற 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது,நேற்று வேட்பாளர் பட்டியல் வெளியானதை கண்டு மதுரை மாவட்ட திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர், மதுரை கிழக்கு தொகுதியில் மீண்டும் மூர்த்தி போட்டியிடுகிறார், மதுரை மத்திய தொகுதியில் மீண்டும் PTR பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார்.

இந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் இருவரும் மீண்டும் போட்டியிடுவார் என திமுகவினர் எதிரிப்பர்த்த ஓன்று தான், ஆனால் மற்ற தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்களை அறிந்த திமுகவினர், திமுக தலைமைக்கு என்ன ஆச்சு.! இப்படி டம்மி வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளார்களே என குழம்பி போய் உள்ளனர், இது குறித்து விசாரித்ததில் இதன் பின்னனியில் திமுக மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவில் இருந்து முக.அழகிரி நீக்கப்பட்ட பிறகு, முக ஸ்டாலினிடம் ஒட்டி கொண்ட மூர்த்தி மதுரை மாவட்டத்தில் தன்னை விட யாரும் கட்சியில் வளர்த்து விட கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகின்றவர், அந்த வகையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ வாக இருக்கும் சரவணனுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வில்லை, அந்த தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிமுக வெற்றி திருப்பரங்குன்றம் தொகுதியில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூவை எதிர்த்து கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தேர்தல் பணியை செய்து வந்தவர் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் இள-மகிழன், அதே போன்று சோழவந்தான் தொகுதியில் மீண்டும் போட்டியிட சீட் கேட்டு பலவேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தவர் முன்னால் அமைச்சர் தமிழரசி, இவர்கள் இருவரும் கனிமொழி ஆதரவாளர்கள், இதில் இள-மகிழனுக்கு அந்த தொகுதி இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கும் உண்டு.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கனிமொழி ஆதரவாளர்கள் என்பதால் கடந்த ஒரு மதத்துக்கு முன்பே கனிமொழி சிபாரிசில் மதுரை மாவட்டத்தில் ஒரு ஆட்களுக்கு கூட சீட் வழங்கப்படாது, கனிமொழியின் அரசியல் விளையாட்டை வேறு மாவட்டத்தில் காட்டட்டும், எனது மாவட்டத்தில் அது நடக்காது என கட்சி நிர்வாகிகள் மத்தியில் மூர்த்தி பேசியதாக தகவல் வெளியானது, ஆனால் தற்போது அதே போன்று மதுரை மாவட்டத்தில் கனிமொழி ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

மேலும் முன்னால் அமைச்சர் தமிழரிசி சொந்த தொகுதியான சோழவந்தான் தொகுதியில் வாய்ய்பு வழங்கப்படாமல், மானாமதுரை தொகுதியில் இம்முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் தொகுதி பட்டியல் வெளியான பின்பு திமுக எம்.எல்.ஏ மூர்த்தி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய போது கனிமொழி பின்னல் போனால் என்ன நிலைமை என்பது இப்போது தெரிகிறதா என பேசியதாக மதுரை திமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.