மணல் கடத்தலுக்கு எதிராக வழக்கு தொடுத்த திமுக எம்.எல்.ஏ க்கு சீட் இல்லை.! பாஜகவில் இணையும் திமுக எம்.எல்.ஏ.!

0
Follow on Google News

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றவர் டாக்டர் சரவணன், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அரசியலுக்கு வந்த சரவணன் திமுகவில் இணைத்ததில் இருந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள மூன்று மாவட்ட செயலாளர்களும் கட்டம் கட்டி தொடர்ந்து பல இடையூறுகளை செய்து, அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் முட்டு கட்டையாக இருந்து வந்தவர்கள் தற்போது அவரை திமுகவில் இருந்து வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளியுள்ளனர்.

எம்ஜிஆர் கட்சி தொடங்கிய பின்பு தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி, எம்ஜிஆர் மறைவுக்கு பின் 1989 சட்டமன்ற தேர்தலின் ஜெ அணி மற்றும் ஜானகி அணி என அதிமுக பிரிந்திருந்த போதும், 1996 சட்டமன்ற தேர்தல் என இந்த இரண்டு தேர்தலின் மட்டும் திமுக வெற்றி பெற்றியிருந்தது, அதன் பின்பு 2001 சட்டமன்ற தேர்தல் தொடங்கி தொடர்ந்து நடந்த அடுத்தடுத்து நடத்த தேர்தலில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று அசைக்க முடியாத அதிமுக கோட்டையாக இருந்து வந்தது திருப்பரங்குன்றம் தொகுதி.

இந்நிலையில் 2018 சட்டமன்ற இடைதேர்தலில் திமுக சார்பில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, மதுரை திமுக மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, கோ.தளபதி மற்றும் மணிமாறன் ஆகியோர் சரவணனுக்கு எதிராக இருந்தனர், மேலும் சரவணன் வெற்றியை தடுக்க பல உள்ளடி வேலைகளையும் செய்து வந்தனர்.ஆனால் அமமுக 34 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றது, இதனால் அதிமுக வாக்குகள் பெருமளவு அதிமுக பிரித்ததால், இரண்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிஷ்டவசமாக வெற்றி பெற்றார்.

சரவணன் வெற்றியை பொறுத்து கொள்ள முடியாத மாவட்ட செயலாளர்கள், நாங்கள் மாவட்ட செயலாளர்கள் எங்களை கேட்காமல் ஏதும் செய்யக்கூடாது, எங்கள் அனுமதியுடன் செய்ய வேண்டும் என்றும், மேலும் கட்சி நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணன் உடன் எந்த தொடர்பும் வைக்க கூடாது என மறைமுக உத்தரவிட்டனர் மாவட்ட செயலாளர்கள்.

மணல் கடத்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் சரவணன் வழக்கு தொடுத்த போது, மணல் குவாரி நடத்தி வரும் மதுரை மாவட்ட செயலாளரான மூர்த்தி, மற்றும் கோ.தளபதி இருவரையும் கடுமையாக கோவம் அடைய செய்தது, இதன் பின்பு இவரை முற்றிலும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என முடிவு செய்த்தவர்கள், இம்முறை மீண்டும் சரவணன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதவாறு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கான வேலையை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் தூண்டுதலில் தனக்கு தேர்தலில் மீண்டும் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணன் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது, இதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதா தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு அமமுகவை சேர்ந்த பெரும்பாலானவர் மீண்டும் அதிமுகவில் இணைந்து உள்ளதால், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வலுவாக இருப்பதால் தான் திமுக தோல்வியை தவிர்க்க அந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது.