உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்… பசும்பொன் குருபூஜை… முதல்வர் விஜய் பின்வாங்கிய பிண்ணனி…

0
Follow on Google News

கடந்த 2026 சட்டசபை தேர்தலில், தென் மாவட்டங்களில் பல தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள வில்லை என்றாலும், கூட காரைக்குடி தேவர் சிலையை சுற்றி வந்து ஒரு கும்பிடு போட்டு விஜய் மேற்கொண்ட பிரச்சாரம் தென் மாவட்டத்தில் மிக பெரிய அளவில் பேசப்பட்டது, அந்த வகையில் முருகன் உலகத்தை சுற்றி வந்தும் ஞானப்பழம் கிடைக்காது, ஆனால் விநாயகர் தாய் , தந்தையை இருந்த இடத்தில் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்று விடுவார்.

அது போன்று தென் மாவட்டங்களில் ஒவ்வொரு தொகுதியாக திமுக , அதிமுக தலைவர்கள் சுற்றி வந்தாலும் கூட, விஜய் காரைக்குடி தேவர் சிலையை மட்டும் சுற்றி, தென் மாவட்டதில் மிக பெரிய வெற்றியை கடந்த 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார், விஜய் சுற்றி வந்து வாங்கி பிரச்சாரம் செய்த தேவர் சிலை அமைந்திருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்ட்டமன்ற தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றது.

மேலும் தென் மாவட்ட தலைநகரான மதுரையில் உள்ள பத்து தொகுதியில் 8 தொகுதியில் தவெக வெற்றி பெற்றது, அந்த வகையில் விஜய்யின் கடந்த சட்டசபை தேர்தலின் போது காரைக்குடியில் மேற்கொண்ட பிரச்சாரம் கைகொடுத்தது. மேலும் தொடர்ந்து முதல்வராவதற்கும் முன்பும் கூட பல மேடைகளில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழை பேசியவர் விஜய் என்பதற்கும், இன்னும் அவர் அப்போது பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் முதல்வராக சமீபத்தில் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜையில் கலந்து கொள்வதில் மிக ஆர்வமாகவே முதல்வர் விஜய் இருந்துள்ளார், மேலும் தென்மாவட்ட அமைச்சர்களான CTR நிர்மல் குமார், TK பிரபு ஆகியோர் முதல்வர் விஜய்யை தேவர் குருபூஜை விழாவில் கலந்துக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள், முதல்வர் விஜய்யும் கலந்து கொள்வது கிட்ட தட்ட உறுதியாகி இருக்கிறது.

சென்னையில் இருந்து தனி விமானத்தில் முதல்வர் விஜய் மதுரை வந்து, அங்கிருந்து தரைமார்க்கமாக செல்வதா அல்லது ஹெலிகாபட்டரில் செல்வதா என ஆலோசனை செய்த போது, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் பசும்பொன் குருபூஜைக்கு வருவதால், பசும்பொன்னில் ஹெலிபேட் அமைக்கப்பட இருக்கிறது, மதுரையில் இருந்து துணை ஜனாதிபதி ஹெலிகாப்பட்டரில் பசும்பொன் செல்கிறார்.

அதே ஹெலிபேட்டை பயன்படுத்தி முதல்வர் விஜய்யும், மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிக்கப்பட்டேரில் பசும்பொன் செல்வது என முடிவு செய்யப்பட்டு இருந்திருக்கிறது. இதனை தொடர்ந்து பசும்பொன் குருபூஜைக்கு 1 வாரத்திற்கு முன்பு உளவு துறை ரிப்போர்ட் ஒன்று முதல்வர் விஜய்க்கு சென்று இருக்கிறது.

அதில் சும்மாவே பசும்பொன் குருபூஜையில் மக்கள் கூட்டம் அலை மோதும், இதில் முதல்வர் விஜய் வருகையால் மக்கள் முண்டியடித்து கொண்டு விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டால், எதாவது விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது, ஆகையால், பசும்பொன்செல்வதை முதல்வர் தவிர்க்க வேண்டும் என முதல்வருக்கு உளவு துறை ரிப்போர்ட் சென்று இருக்கிறது. இதனை தொடர்ந்து முதல்வர் விஜய்யின் பசும்பொன் குருபூஜை பயணம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் பசும்பொன் வருவதற்கு பதிலாக சென்னை நந்தனத்தில் அமைத்துள்ள பசுபொன் முத்துராமலிக்க தேவர் சிலைக்கு , தேவர் ஜெயந்தி அன்று மாலை அனுவித்து மரியாதை செய்து, தென் மாவட்டம் போன்று தலைநகர் சென்னையிலும் தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பித்து இருக்கிறார் , இருந்தாலும் தேவர் ஜெயந்தி இல்லாத நாட்களில் பசுபொன் சென்று அங்கே தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்யும் திட்டத்தில் முதல்வர் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here