தவெக ஆட்சியை கவிழ்க்க சதி… கட்சிதமாக முறியடித்த விஜய்… தோல்வியில் முடிந்தது திமுக வியூகம்..

0
Follow on Google News

தவெக ஆட்சிக்கு வந்து 6 மதங்களை கடந்த நிலையில், இனி எப்போது வேண்டுமானாலும் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால், தமிழக அரசியல் களம் பரபரப்புடன் உள்ளது, மறுப்பக்கம் அடுத்து இடைதேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு நலத்திட்டம் வழங்க முதல்வர் விஜய் சுற்று பயணத்தை மேற்கொண்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

கடந்த 2026 சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்ற மொத்தம் 108 தொகுதிகளில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்ததை தொடர்ந்து தவெக கைவசம் 107 தொகுதிகள் இருந்தது, இதனை தொடர்ந்து தற்பொழுது நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றதை தொடர்ந்து தவெகவின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்து இருக்கிறது.

இந்நிலையில் மொத்தம் 234 தொகுதிகளில் 5 தொகுதிகள் காலியாக இருக்கும் இந்த சுழலில், மொத்தம் 227 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்பொழுது உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், தனிப்பெரும்பானமையை நிரூபிக்க 115 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை, தற்பொழுது தவெக கைவசம் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் 122 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் கூட.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் கைவசம் இருக்கும் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு எதிராகவே வாக்களிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் பிரதமர் வேட்பாளர் யார் என்கிற பஞ்சாயத்து தவெக கூட்டணியில் வெடித்து இருக்கும் நிலையில், திமுக பக்கம் அழைப்பு வந்தால் தவெக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது வாக்களிக்க வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் IUML தவெக கூட்டணியை விட்டு வெளியேற வாய்ப்பில்லை, ஆனால் விடுதலை சிறுத்தை கட்சிகள் திமுக – தவெக என இரண்டு பக்கம் துண்டை போட்டு இரட்டை வேடம் நடத்தி வருவதை பார்க்க முடிகிறது, இப்படியான ஒரு அரசியல் சூழலில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் 115 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மெஜாரிட்டியை தவெக நிரூபிக்க முடியமா என்கிற விவாதம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

தவெக கைவசம் இருக்கும் 109 சட்டமன்ற உறுப்பினர்கள், IUML கைவசம் 1 சட்டமன்ற உறுப்பினர், அமமுக சார்பில் வெற்றி பெற்ற காமராஜர் தற்பொழுது தவெகவுக்கு ஆதரவாக உள்ளார். இப்படியான சூழலில் தவெக கைவசம் இருக்கும் மொத்தம் 111 சட்டமன்ற உறுப்பினர்களில், இன்னும் 4 சட்டமன்ற உறுப்பினர் தேவை என்பதால் பாமகவின் ஆதரவை கோரி , அமைச்சரவையில் பாமகவுக்கு இடம் கொடுத்து ஆட்சியி தக்க வைக்கும் முடிவில் தவெக உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பாமக உள்ளே வந்தால் விசிக வெளியேறும் என பகிரங்கமாக தெரிவித்துள்ள நிலையில் விசிக கைவசம் இருக்கும் 2 எம்எல்ஏ வா இல்லை பாமக கைவசம் இருக்கும் 4 எம் எல் ஏ வா என்றால் , நிச்சயம் தவெக பாமக கைவசம் இருக்கும் 4 எம் எல் ஏ க்களை தக்க வைக்க தான் முன் வரும், அப்படியிருக்கையில் விசிக வெளியேறினாலும், அதற்கு தடையாக இருக்காது தவெக என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

மேலும் இன்னும் அதிமுகவில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக தரப்பில் பேசி வருவதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் பூத்து, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து பின்பு தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையும் திட்டத்திலும் சில அதிமுக எம் எல்ஏக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!