பணியின் மூலம் தனக்கு வாழ்வளித்த தமிழ்நாட்டையே தன்னுடைய சொந்த மண்ணாக நினைக்கிறேன் என்று தனது பணி ஓய்வின்போது தமிழகத்தை பெருமையாக பேசியவர் தமிழக முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதி IPS , தற்போது தமிழக சிறைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்து, மேம்படுத்தும் குழுவிற்கு ஜே.கே.திரிபாதி IPS யை தலைவராக நியமித்திருக்கிறார் முதல்வர் விஜய்.
ஜே.கே. திரிபாதி IPS 2007 முதல் 2010 வரை தமிழகச் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாகப் பணியாற்றிய காலத்தில் மேற்கொண்ட முக்கியமான முயற்சி, சிறைக் கைதிகளுக்குக் கல்வியும் தொழிற்பயிற்சியும் அளித்து, அவர்கள் தண்டனைக் காலத்திற்குப் பிறகு சமூகத்தில் மீண்டும் நல்ல வாழ்க்கையைத் தொடங்க வழிவகை செய்த்தவர் ஜே.கே. திரிபாதி IPS

அவர் முன்னெடுத்த மறுவாழ்வுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட மகாத்மா காந்தி சமூகக் கல்லூரி வழியாக, சிறைக் கைதிகள் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. சிறை கைதிகளுக்கு கணினிப் பயிற்சி, DTP, குளிர்சாதனப் பெட்டி மற்றும் ஏர் கண்டிஷனிங் பழுதுபார்ப்பு, ஃபேஷன் டிசைனிங், மல்டிமீடியா, அனிமேஷன், கேட்டரிங், வீட்டு மின்சாரப் பணிகள்,
வாகனப் பழுதுபார்ப்பு போன்ற தொழிற்பயிற்சிகள் வழங்கத் திட்டமிடப்பட்டது. மேலும் தொழிற்பயிற்சியுடன் ஆங்கிலப் பேச்சு, தகவல் தொடர்புத் திறன், கணினிப் பயன்பாடு, வேலைக்கான தகுதியைக் கண்டறிதல் போன்ற பயிற்சிகளும் இடம்பெற்றன. கைதிகள் வேலைக்குச் செல்லத் தயாராகும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டன
விடுதலைக்குப் பிறகு வேலைவாய்ப்பு பெற உதவும் வகையில், பயிற்சியை முடித்த கைதிகளுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நிறுவனங்களின் உதவியுடன் நேர்காணல்களை நடத்தவும் திட்டமிடப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வரும் ஒருவர் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க ஜே.கே. திரிபாதி IPS இந்த செயல் பெரிதும் உதவியது.
2002 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் காவல் துறை சிறப்புப் பணிப் பதக்கம் ,
2008 ஆம் ஆண்டு சிறந்த பொது நிர்வாகத்திற்கான பிரதமர் விருது, 2011 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் காவல் துறை சிறப்புச் சேவைப் பதக்கம் என உயரிய விருது பெற்ற ஜே.கே. திரிபாதி IPS , எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அவர் சொல்வதையெல்லாம் அப்படியே கேட்க மறுத்தார் ஜே.கே. திரிபாதி IPS .
குறிப்பாக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த சிலவற்றை, விதிகள் ஒத்துக்கொள்ளாது என்றார் ஜே.கே. திரிபாதி IPS , அதற்காக, டிஜிபியாக இருந்த திரிபாதி IPS க்கு நெருக்கடி கொடுக்க, சிறப்பு டிஜிபி என்ற புதிய பதவியை உருவாக்கி, ராஜேஸ்தாஸ்க்கு பதவிக் கொடுத்து, இரட்டைத் தலைமையை காவல்துறையில் உருவாக்கினார் எடப்பாடி பழனிசாமி.
பின்னர் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் பெண் எஸ்.பி. கொடுத்த பாலியல் புகாரில் சிக்கி கைதானதெல்லாம் ஊர் அறிந்த விஷயம். ஜே.கே. திரிபாதி IPS தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி என்ற காவல்துறையின் உச்சப்பட்ச பதவியில் இருந்தபோதும் கூட, பத்திரிகையாளர்களிடம் இன்முகத்துடன் பழகும், அவர்கள் சொல்லும் விஷயங்களை காது கொடுத்தும் கேட்கும் நல்ல பண்பும், பழக்கமும் அவருக்கு இருந்தது. ஒரு காவல்துறை அதிகாரி அப்படிதான் இருக்க வேண்டும். அப்படியான நல்ல, திறமையான, Strict Officer-ஐ தமிழக சிறைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்து, மேம்படுத்தும் குழுவிற்கு தலைவராக தேர்வு செய்திருக்கிறார் முதல்வர் விஜய் !




