யார் இந்த கண்ணன் ரவி.? சபரீசன் உடன் என்ன தொடர்பு… துபாய் வரை தொழில் சாம்ராஜ்யம்…

0
Follow on Google News

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், திரைப்படத் தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் நவம்பர் 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்திற்காக வழங்கப்பட்ட அழைப்பிதழ் சாதாரணமான ஒன்றல்ல. மயில் தோகை விரிப்பதைப் போன்ற வடிவமைப்புடன், பரிசுப் பொருட்களும் இடம்பெற்றிருந்த பிரத்யேகப் பெட்டி சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. ஒரு திருமண அழைப்பிதழின் மதிப்பு மட்டும் சுமார் 25 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.அதேபோல, திருமண வரவேற்பு விருந்திலும் பிரம்மாண்டத்திற்குப் பஞ்சமில்லை.

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் குழுவினர் உணவு ஏற்ப்டுகளில், பஞ்சாபி உணவுகள், குஜராத்தி தாலி, மங்களூர் நீர் தோசை, பெங்களூரு தட்டே இட்லி, கேரள அப்பம், புட்டு, மோமோஸ், பீட்சா, பல்வேறு இனிப்பு வகைகள் என அறுபதுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுமார் 15 ஆயிரம் பேருக்கு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வளவு பிரமாண்டமாக நடைபெறும் திருமண விழாவில் பெண் விட்டார் துரைமுருகன் குடும்பத்தினர் யார் என்பது தெரியும்,

ஆனால் யார் இந்தக் கண்ணன் ரவி என பலரும் தேட தொடங்கி இருக்கிறார்கள், தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராக அறியப்படும் கண்ணன் ரவி, Kannan Ravi Group என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சாந்தனு பாக்யராஜ், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான ‘இராவண கோட்டம்’ திரைப்படம் மூலம் அவர் கவனம் பெற்றார். அதன்பிறகு, ஜீவா நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ உள்ளிட்ட படங்களிலும் தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

அவரது மகன் தீபக் ரவியும் திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் இணைந்து செயல்பட்டு வருகிறார். துரைமுருகன் குடும்பத்துடன் ஏற்பட்டுள்ள திருமண உறவு, கண்ணன் ரவியின் அரசியல் வட்டாரத் தொடர்புகள் குறித்த விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், திமுகவின் முக்கிய நபர்களுடனான நிதி மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத் தொடர்புகள் குறித்து சில அரசியல் விமர்சனங்களும் ஊடகங்களில் கண்ணன் ரவியை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ளன.

வளைகுடாப் பகுதியில் ஒரு தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய கண்ணன் ரவி , 1995-ல் கண்ணன் ரவி குழுமத்தை (KRG) நிறுவினார். துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த வணிகக் குழுமம், மின் இயந்திரவியல் சேவைகள், ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் ஒப்பந்தப் பணிகள் உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான் மற்றும் ஃபுஜைரா உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் பரந்துள்ளன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் முதலீடுகள் மற்றும் நிதி மேலாண்மைகளைக் கவனிப்பதில் தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கு முக்கியப் பங்கு இருப்பதாகப் பல்வேறு தரப்பிலும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. லண்டன் மற்றும் துபாயில் சபரீசன் மேற்கொண்டுள்ள முதலீடுகளை ஒருங்கிணைப்பதிலும், கவனிப்பதிலும் கண்ணன் ரவி செயல்பட்டு வருவதாகவும், அதற்காகவே இந்த அரசியல் தொடர்புகள் வலுப்பட்டு வருவதாகவும் எதிர்கட்சியினர் மற்றும் அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here