நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டசபை இடைதேர்தலின் தவெக வெற்றி பெற்றது , என்றாலும் கூட இரண்டு தொகுதியிலும் தவெக மிக கடுமையாக போராடி தான் வெற்றி பெற்றது, இதில் தாராபுரம் சட்டசபை தொகுதியில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தவெக வெற்றி பெற்று இருந்தது, அந்த வகையில் தாராபுரம் தொகுதியில் சற்று அதிகமாக போராடி இருந்தால் திமுக வெற்றி பெற்று இருக்கும் என்கிற ஒரு வித ஏமாற்றம் திமுகவுக்கு உண்டு.
அதே நேரத்தில் நடக்க இருக்கு இடைதேர்தலிலே தவெகவுக்கு மிக பெரிய சவாலாக இருந்த தொகுதி தாராபுரம் தொகுதி தான், அதிலே வெற்றி பெற்று விட்டது தவெக , அடுத்து இனி மற்ற தொகுதிகளில் நடக்கும் இடைதேர்தலில் தவெக மிக எளிமையாக வெற்றி பெற்று விடும் என்கிற நம்பிக்கையில் தவெக உள்ளது. இந்நிலையில் மீதம் காலியாக இருக்கும் 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைதேர்தல் விரைவில் இருக்கும் நிலையில்.

அந்த 5 தொகுதிகளில் குறிப்பாக அம்பாசமுத்திரம் தொகுதி தற்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இந்த தொகுதியில் மூன்று காட்சியிலும் வலுவான வேட்ப்பாளரை களம் இறக்க அதிமுக – திமுக – தவெக ஆகிய மூன்று கட்சிகளும் முடிவு செய்துள்ளது. தவெக சார்பில், ஏற்கனேவே அம்பாசமுத்திரம் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்து, தவெக வில் இணைந்த இசைக்கி சுப்பையா தான் போட்டியிடுகிறார் என்பதில் பெரிதாக மாற்றம் இருக்காது.
அம்பாசமுத்திரம் தொகுதியில் பெரும்பான்மையாக முக்குலத்தோர் சமூக மக்கள் உள்ளனர் , ஆகையால் தவெக சார்பில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இசக்கி சுப்பையாவை நிறுத்த இருப்பதால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அதே முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஒருவரையே வேட்ப்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் திமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அம்பாசமுத்திரம் இடைதேர்தலுக்கான திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனேவே ஓபிஎஸ் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் அம்பாசமுத்திரம் தொகுதியில் நியமிக்கப்பட்டு விட்டு திமுக வேலையை துரிதப்படுத்தி இருக்கிறது.
மேலும் அதிமுக சார்பில் ஓய்வு பெற்ற காவலர் வெள்ளத்துரை போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைந்து கொண்ட வெள்ளதுறை தான் அதிமுகவின் அம்பாசமுத்திரம் தொகுதியின் வேட்பாளராக இருக்க அதிக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளதால், அம்பாசமுத்திரம் தொகுதி மும்முனை போட்டிக்கு தயாராகி விட்டது.
அம்பா சமுத்திரம் தொகுதியில் இசைக்கி சுப்பையா அதிமுகவின் முகமாகவே பார்க்கப்பட்டார், ஆனால் அவருடைய விலகல் அதிமுகவுக்கு அம்பா சமுத்திரம் தொகுதியில் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், தற்பொழுது இசக்கி சுப்பையா சமூகமான முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெள்ளத்துரை அதிமுகவில் இணைந்துள்ளது, அம்பை தொகுதியில் அதிமுகவுக்கு புத்துணர்ச்சி கொடுப்பது போன்று அமைத்துள்ளது.
இருந்தும் ஒரு பக்கம் அதிமுக சார்பில் வெள்ளத்துரை, மறுபக்கம் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓ பி ரவிந்த்ரநாத் என திமுக – அதிமுக இரண்டு கட்சிகளின் வியூகங்களை எப்படி முதல்வர் விஜய் தன்னுடைய பிரச்சாரம் மூலம் முறியடிக்க போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் இம்மாத இரண்டாவது வாரத்தில் முதல்வர் விஜய் அன்பாசமுத்திரம் தொகுதிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

