அன்பில் மகேஷ் வெளியே … மனைவி ஜனனி உள்ளே… தவெகவில் உள்ளே வெளியே விளையாட்டு…

0
Follow on Google News

சிறையில் இருக்கும் அன்பில் மகேஷ் ஜாமீன் பெற்று வெளியே வர முயற்சித்தால், அவருடைய மனைவி ஜனனியை சிறையில் அடைக்க முன் ஏற்பாடுகளை தவெக அரசு செய்து வரும் தகவல் , அன்பில் மகேஷ் கவனத்துக்கு சென்றதும், சிறையிலே இருப்போமா, இல்லை வெளியே செல்வோமா என்கிற மிக பெரிய குழப்பத்தில் இருக்கிறாராம் அன்பில் மகேஷ், மேலும் தவெக அரசு ஆடும் இந்த உள்ளே வெளியே ஆட்டம் அன்பில் மகேசுக்கு மட்டுமில்லை,

ஒட்டுமொத்த திமுக கூடாரத்துக்கு புரியாத புதிராக இருந்து வருகிறது என்கிறது திமுகவுக்கு நெருக்கமாக இருக்கும் வட்டாரங்கள், கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் ஊழல் குற்றசாட்டு தொடர்பாக சிறையில் உள்ளார், சிறை செல்வதற்கு முன்பு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அன்பில் மகேஷ் கைது செய்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருக்கும் அன்பில் மகேஷை போலீஸ் கஷ்டத்தில் எடுத்து விசாரணை நடந்து நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, ஆனால் போலீஸ் தரப்பில் அன்பில் மகேஷ் மீது உள்ள குற்றசாட்டுகளுக்கான ஆதாரங்களை முன் வைத்து, இந்த முறைகேட்டில் வேறு யார், யாருக்குத் தொடர்புள்ளது என்பது குறித்தும், முத்துக்குமார், சுரேஷ், அரசக்குமாரின் பங்கு குறித்தும்,

அன்பில் மகேஸ் மற்றும் அவரது பினாமிகளின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தினால் மட்டுமே விடை கிடைக்கும். எனவே 5 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என்று போலீஸ் தரப்பில் வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அன்பில் மகேஸை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அன்பில் மகேஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருக்கிறது காவல் துறை தரப்பு, இந்நிலையில் அன்பில் மகேசிடன் விசாரணை நடத்தப்பட்ட பின்பு , அன்பில் மகேஷ் தரப்பில் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், விசாரணை முடிந்து விட்ட காரணத்தினால், அன்பில் மகேஷ்க்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வாய்ப்புள்ளது, ஆனால் அன்பில் மகேஷ் ஜாமின் பெற்றால்,

அடுத்து என்ன செய்ய வேண்டும் என தவெக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது, அதில் அன்பில் மகேஷ் சிறையில் இருக்கும் போதே, அவருடைய மனைவி ஜனனிக்கு போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பி விசாரணை நடந்த திட்டமிட்டு இருப்பதாகவும், மேலும் விசாரணை முடிந்த பின்பு, ஏற்கனவே அன்பில் மகேஷ் மனைவி ஜனனி இந்த ஊழல் விவகாரத்தில் சிக்கி இருக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் அன்பில் மனைவி ஜனனி மீது எப் ஐ ஆர் பதிவு செய்யவும் தவெக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும்.

அன்பில் மகேஷ்க்கு ஜாமின் கிடைத்து வெளியே வரும் சூழல் ஏற்பட்டால், அடுத்து அன்பில் மகேஷ் மனைவியை கைது செய்து சிறையில் அடைக்கும் திட்டமும் கூட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, அதாவது இந்த வழக்கை பொறுத்தவரை அன்பில் மகேஷ் சிறையில் இருந்து வெளியே வந்தாலே, அது தவெக அரசு, தங்களுக்கு கிடைத்த பின்னடைவாக கருதுகிறது என கூறப்படுகிறது.

அந்த வகையில் அடுத்த ஓரிரு நாட்களில் அன்பில் மகேஷ் மனைவி ஜனனிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அதிக வாய்ப்புள்ளது என்றும், மேலும் ஜனனி கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்பில் மகேஷ் ஜமீனுக்கு நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் முட்டு கட்டை போட வாய்ப்புள்ளது என்கிறது வழக்கறிஞர்கள் வட்டாரங்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!