கே என் நேரு விவகாரம்… யார் இந்த ஜனனி … அட கடவுளே…!

0
Follow on Google News

கடந்த திமுக ஆட்சியில் ,, ரூ 634 கோடி பணியிட நியமன முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சின்னதிரை நடிகையான ஜனனி அசோக்குமாருக்கு தொடர்பாக இருப்பதாக ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கே என் நேரு விவகாரம் மேலும் சூடு பிடிக்க தொடங்கியது.

அதாவது முன்னாள் திமுக அமைச்சர் கே என் நேரு கைவசம் இருந்த நகராட்சி நிர்வாகத்துறையில் பணி அமர்த்தலுக்கான ₹634 கோடி ஊழலில் எதற்காக சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் யையும் ஏன் விசாரிக்க வேண்டும் வேண்டும் என கடந்த இரண்டு நாட்களாக ஒரு தகவல் காட்டு தீ பரவி வந்து கொண்டிருக்கிறது,

அதில் சென்னை மாநகராட்சி டெண்டர் மூலமாகவும் நிறைய சம்பாதித்தாகவும் அதன் மூலம் வந்த ஊழல் கமிஷன் பணத்தில் ECR ல் துணிக்கடை, ஸ்வீட்கடை, ஹோட்டல் என நிறைய நிறுவனங்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அதன் மூலம் ஏக போகத்திற்கு வாழ்ந்து வந்துள்ளார் சின்ன திரை நடிகை ஜனனி என முன்னாள் அமைச்சர் கே என் நேரு ஊழல் விவகாரத்துடன் தொடர்பு படுத்தி அந்த தகவலில் குறிப்பிட்டப்பட்டிருந்தது.

மேலும் கே என் நேரு சகோதரர் கே என் ரவிச்சந்திரன் உதவியாளர் கவிபிரசாத் மற்றும் செல்வமணி மூலம் நிறைய பணம் ஜனனி அசோக்குமார், ஷபானா போன்ற நிறைய தமிழ் சின்னத்திரை நடிகைகளின் வங்கிக் கணக்குகளுக்கு கமிஷன் அடிப்படையில் செலுத்தப்பட்டு அதன் மூலம் வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் பரப்பப்பட்ட அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் ஜனனி அசோக்குமார் மற்றும் அவரது நெருங்கிய தோழி செம்பருத்தி நாடகப்புகழ் சின்னத்திரை நடிகை ஷபானா வையும் இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்ற சின்னத்திரை நடிகைகளையும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை

கே.என்.நேரு நகராட்சி நிர்வாக 634 கோடி ஊழல் வழக்கில் விசாரணை வளையத்திற்கு கொண்டு வந்து அனைவரின் வங்கிக் கணக்கையும் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரப்பப்பட்டு வந்த நிலையில்,

யார் அந்த ஜனனி என பலரும் தேட தொங்கினார்கள், இந்த நிலையில் இது குறித்து ஜனனி அசோக் குமார் விளக்கம் கொடுத்துள்ளார், அதில், கடந்த இரண்டு நாள்களாக சமூக ஊடகங்களில் ரூ.634 கோடி ஊழலுடன் தன் பெயரைத் தொடர்புபடுத்தி வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள ஜனனி அசோக் குமார், மேலும் தமக்கு எந்தவிதமான அரசியல் பின்னணியோ அல்லது எந்த அரசியல் தலைவருடனும் தொடர்போ அல்லது பழக்கமோ இல்லை என தெரிவித்த ஜனனி அசோக் குமார்.

மேலும் காவல்துறை விசாரணைக்கு அழைப்பதாலேயே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதிவிட முடியாது. ஊடகங்களும் சமூக ஊடகப் பயனர்களும் உண்மைத்தன்மை அறியாமல் தவறான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்,” என ஜனனி அசோக் குமார் தன்னை பற்றி கடந்து இரண்டு நாட்களாக முன்னாள் திமுக அமைச்சர் கே என் நேரு ஊழல் விவகாரத்தில் தொடர்பு படுத்தி பரப்பப்பட்ட தகவலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் , ஜனனி கொடுத்த விளக்கத்தில், காவல்துறை விசாரணைக்கு அழைப்பதாலேயே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதிவிட முடியாது என தெரிவித்துள்ளது ஊழல் விவகாரத்தில் சிக்கி இருக்கும் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு முட்டு கொடுப்பது போன்று அமைத்துள்ளது என்றும், எதற்காக விளக்கம் கொடுப்பதில் ஊழல் விவகாரங்களில் சிக்கி இருக்கும் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஜனனி முட்டு கொடுக்க வேண்டும் என மற்றொரு விவாதம் தற்பொழுது கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.