அமெரிக்காவுக்கு வர்த்தகம் செய்யும் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், சீனா, ரஷ்யா, ஐரோப்பா, இதர பிரிக்ஸ் நாடுகள் உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக இந்தியா – சீனா மத்தியிலான பிரச்சனைகளை தீர்க்க ஆகஸ்ட் 18 திங்கட்கிழமை அன்று, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியாவுக்கு வர உள்ளார்.
இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் சிறப்பு பிரதிநிதிகள் கட்டமைப்பு கீழ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து எல்லை பிரச்சினைகள் தீர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது.

மேலும் பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் SCO மாநாட்டில் கலந்துக்கொள்ளவும், ஜி ஜின்பிங்-ஐ சந்திக்க சீனா செல்ல உள்ள நிலையில், அடுத்த வாரம் இந்தியாவில் முக்கிய பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த சந்திப்புல, நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குறது உறுதியாகலாம், இதோட வர்த்தக உறவுகள், எல்லைப் பிரச்னைகள் பற்றியும் பேசப்படலாம்னு எதிர்பார்க்கப்படுது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் குவோ ஜியாகுன், ‘மோடியின் வருகையை வரவேற்கிறோம், இந்த மாநாடு ஒற்றுமை, நட்பு, பயனுள்ள முடிவுகளை கொண்டு வரும் என தெரிவித்து இருக்கிறார். இந்தியாவும் சீனாவும் உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகள். இவங்களுக்கு இடையேயான நேரடி விமானங்கள், சுற்றுலா, வர்த்தகம், கலாசார பரிமாற்றத்தை பெரிய அளவில் மேம்படுத்தும்.
தற்பொழுது டிரம்ப் இந்தியாவுக்கு 50% வரி விதிச்சிருக்குற நிலையில், இந்தியாவும் சீனாவும் இணைந்து BRICS கூட்டணி மூலமா இதுக்கு பதிலடி கொடுக்க இருப்பது அமெரிக்காவுக்கு கடும் பீதியை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்கே இரண்டு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஆனால் இந்தியா- அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. குறிப்பாக வேளாண்மை மற்றும் பால்பண்ணை துறைகளை அமெரிக்க ஏற்றுமதிகளை அனுமதிப்பதில் இந்தியா தயக்கம் காட்டுகிறது. மேலும் அமெரிக்காவுக்கு எதிராக ரஸ்யா – சீனா நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டி வருவது அமெரிக்காவுக்கு கடும் பீதியை கிளப்பி இருக்கிறது.
மேலும் அமெரிக்காவில் உள்ள எதிர்க்கட்சிகள், இந்தியாவை பகைத்து கொள்ள வேண்டாம் என அமேரிக்க அதிபர் ட்ரம்ப் க்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவை சமாதானம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க குழு வரும் 25-ம் தேதி இந்தியா வர உள்ளது.
இந்த பேச்சுவார்தைக்கு பின்பு அடுத்த மாதம் செப்டெம்பர் மாதம் அமெரிக்க செல்லும் இந்திய பிரதமர் மோடி, அங்கே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் யை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விரைவில் இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அதிகபட்ச வரியை குறைக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

