சமீபத்தில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் மீது பரபரப்பு குற்றசாட்டுகளை வைத்து இருந்தார், அதில் தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து மோசடி செய்ததாக அவர் குற்றம் சாட்டி இருந்தார் ராகுல் காந்தி. தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது. மேலும், ராகுல் காந்தியிடம் குற்றசாட்டுகளை பிராமண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தி இருந்தது. ஆனால் அதற்கு ராகுல் காந்தி மறுத்துவிட்டார்.
இந்நிலையில் பாஜகவின் ஐ.டி. பிரிவு தேசிய தலைவர் தலைவர் அமித் மால்வியா, சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்னாடியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ந்திருந்ததாக குற்றம் சாட்டியிருக்கார். அதை நிரூபிக்கும் வகையில் 1980 ஜனவரி 1-ம் தேதி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை தன்னோட எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, அதுல சோனியாவின் பெயர் இருக்குறதை சுட்டிக்காட்டியிருக்கார் அமித் மால்வியா.

மேலும் சோனியா காந்தி இந்திய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது, தேர்தல் சட்டத்தை வெளிப்படையா மீறிய செயல் என கடுமையா சாடியிருக்கார் அமித் மால்வியா.. மேலும் சோனியா காந்தியின் பெயர் உண்மையான குடியுரிமைக்கான தேவையை பூர்த்தி செய்யாமல் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டது, முதலில் 1980 இல் இத்தாலிய குடிமகனாகவும், பின்னர் 1983 ஆம் ஆண்டில் அவர் சட்டப்பூர்வமாக இந்திய குடிமகனாக மாறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பும் சேர்க்கப்பட்டது’ என அவர் மேலும் கூறினார். ராஜீவ் காந்தியை மணந்த பிறகு இந்திய குடியுரிமையை ஏற்க 15 ஆண்டுகள் ஆனது ஏன் என்ற கேள்வியையும் மால்வியா எழுப்பினார்?
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய அனுராக் தாகூர், சோனியா காந்தி 1983-ல் இந்திய குடிமகன் ஆனார். ஆனால் 1980-ல் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது என்று அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் ராகுல் காந்தியின் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக எம்பி அனுராக் தாக்கூர் சில ஆவணங்களை வெளியிட்டார். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தொகுதிகளில் குளறுபடிகள் இருப்பதாக அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் ஏன் இதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் கடந்த 1952-ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ் கட்சி சேர்ந்து டாக்டர். பீம்ராவ் அம்பேத்கரை தோற்கடித்தனர். அரசியலமைப்பு உருவாக்கிய ஒரு புனிதர் போன்ற தலைவரை தோற்கடித்தனர் என தெரிவித்த அனுராக் தாகூர். மேலும், காங்கிரஸ் கட்சிதான் தேர்தல் முறைகேடுகளுக்கு அடித்தளம் போட்டது என்று தெரிவித்தவர்.
இந்தக் குடும்பம் மற்றும் கட்சிக்கு ஒரு பழக்கம் உள்ளது. தேர்தலில் தோற்றுவிட்டால் தேர்தல் ஆணையத்தையோ, வாக்காளர்களையோ குறை சொல்வார்கள். இந்திரா காந்தி, வாக்காளர்கள் முட்டாள்கள் என்றார். ராஜீவ் காந்தி தேர்தலில் தோற்றபோது வாக்குச் சீட்டுகளைக் குறை கூறினார். ராகுல் காந்தியின் தந்தை வாக்கு இயந்திரத்தில் தேர்தல் நடத்த சொன்னார். ஆனால் ராகுல் காந்தி வாக்குச் சீட்டில் தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார் என அனுராக் தாக்கூர் தெரிவித்து உள்ளார்.

