வீட்டு சிறையில் தேவயானி… காதலனை கரம் பிடித்தது எப்படி… நடிகை தேவயானியின் காதல் போராட்டம்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் ஹோம்லி கேரக்டரில் நடிக்க இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் ஒரே சாய்ஸ் ஆக இருந்தவர் நடிகை தேவயானி. குடும்பப்பாங்கான தோற்றத்தில் தேவயானியின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடிவந்த காலகட்டம் அது.

இரவு பகல் பாராமல் பல ஹீரோக்களுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தார். தமிழில் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு என பிஸியாக இருந்த அவர், தனது மார்க்கெட் உச்சத்தில் இருந்த போதே திடீரென இயக்குனர் ராஜகுமாரனை காதல் திருமணம் செய்துக்கொண்டார். அதுவும் தனது பெற்றோர் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அதையும் மீறி இயக்குனர் ராஜகுமாரனை கரம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜகுமாரன் நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் என 2 படங்களை மட்டுமே டைரக்ட் செய்திருந்தார். இந்த 2 படங்களிலுமே தேவயானிதான் கதாநாயகி. விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தின் போதுதான் தேவயானிக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே காதல் ஏற்பட்டு பிறகு இருவரும் விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் ரிலீஸான 10வது நாளில் திருமணம் செய்துக்கொண்டனர்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் படப்பிடிப்பு நடந்த போது பிஸியான நடிகையாக இருந்த தேவயானிக்கும் எனக்கும் காதல் எல்லாம் இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி மோதல்தான் நடக்கும் என்று வெளிப்படையாக பேசிய ராஜகுமாரன், மேலும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஷூட்டிங்கின் போது நான் படும் சிரமங்களையும் கஷ்டங்களையும் பார்த்துவிட்டு இரவு நேரங்களில் தேவயானி எனக்கு போன் பண்ணி ஆறுதலாக பேசுவார்.

அப்போதுதான் அவருக்கு என் மீது ஒரு தனிப்பட்ட அன்பும் பாசமும் இருப்பதை நான் தெரிந்துக்கொண்டேன். நாளடைவில் அதுதான் எங்களுக்குள் காதலாக மாறியது என்றும் இயக்குனர் ராஜகுமாரன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். வழக்கமாக பெரும்பாலான சினிமா கதாநாயகிகள், தன்னுடன் நடிக்கும் அழகான ஹீரோக்களின் அழகில் மயங்கி அவர்களை காதலிப்பதுதான் வழக்கம்.

சில நேரங்களில் இயக்குனர்களின் மீது நாயகிகளுக்கு காதல் ஏற்படுவது உண்டு. அந்த வகையில் வசீகரமான உருவத்தோற்றம் இல்லாத, பின்னணியில் பெரிய பொருளாதார வசதியும் இல்லாதவர் ராஜகுமாரன். 2 படங்களை மட்டுமே அவர் இயக்கிய சூழலில் இயக்குனர் ராஜகுமாரனை, தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு வசீகரமான நாயகியாக வலம் வந்த தேவயானி காதல் திருமணம் செய்தது, அப்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை பலத்த அதிர்ச்சியை கூட ஏற்படுத்தியது.

இதற்கிடையே இயக்குனர் ராஜகுமாரனின் காதல் வலையில் விழுந்தது எப்படி என்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் தேவயானி, அதில் எனது கணவர் இயக்கிய படங்களில் நான் நாயகியாக நடித்த போது, அவர் எழுதிய காதல் வசனங்களில் தான் நான் மயங்கி விழுந்துவிட்டேன். மனதில் காதல் இருந்தால்தானே இப்படி எல்லாம் வசனம் பேச முடியும், இந்த அளவுக்கு இவர் காதல் வசனங்களை எழுதுகிறார் என்றால் எந்த அளவுக்கு அவர் காதலுடன் இருப்பார் என்றுதான் அவர் மீது காதல் வந்தது என்று கூறியிருக்கிறார். தனது படத்தின் கதாநாயகியை காதல் வசனம் எழுதியே தன்னை காதலிக்க வைத்த பெருமை, தமிழ் சினிமாவில் இயக்குனர் ராஜகுமாரனையே சேரும்.