வனிதா விஜயகுமார் 3 திருமணங்கள் செய்து 3 கணவர்களையும் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே சினிமாவில் நடன இயக்குனராக உள்ள ராபர்ட் மாஸ்டருடன் வனிதா விஜயகுமார் சில காலம் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் இருந்தார். ஆனால் அதுவும் நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்தான் ராபர்ட் மாஸ்டர்.
அதனால் வனிதா, ராபர்ட் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அதுவும் ஒரு கட்டத்தில் பொய்த்துப் போனது. சமீபத்தில்தான் ராபர்ட்டின் தாயார் மறைந்திருக்கிறார். சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமார் டைரக்சனில் வெளியான படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் கதாநாயகனாக வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் நடித்தது குறித்து நடிகர் ராபர்ட் மாஸ்டர் சமீபத்தில் பேசுகையில், என்னுடைய அம்மாவுக்கு வனிதாவை பிடிக்காது. நான் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் செய்தது என் அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏன் இந்த படத்தில் நடித்தாய் என்று தான் என்னை கேட்டார். எனது அப்பாவும் அப்படித்தான் கேட்டார். நான் அவர்களிடம் இதுபற்றி சொல்லும்போது கூட, ஏன் இப்படி பண்ணுறே? என்றுதான் என்னை கேட்டார்கள்.
நானும் வனிதாவுடன் பழகி இருக்கிறேன். ஜோவிகாவை படிக்க வைத்திருக்கிறோம். இந்த படத்தில் நடிக்க நான் போகவில்லை என்றால் பணத்தை இழந்து விடுவார்கள். நான் போய் உதவி செய்கிறேன் என்று சொல்லி விட்டு தான் அந்த படத்துக்குள் வந்தேன். என்னை முதலில் அந்த படத்துக்கு இயக்குனராகத்தான் பிக்ஸ் செய்தார்கள். ஆனால் வனிதா அங்கே போய் மாறிவிட்டார். அவரை மாற்ற முடியாது. நாம்தான் மாறிக்கொள்ள வேண்டும்.
வெளிநாடு ஷூட்டிங் சென்றால் பாஸ்போர்ட்கள் தயாரிப்பாளர் கையில் தான் இருக்கும். அப்போது மட்டும் என்னிடம் இருந்திருந்தால் பாதியில் நான் திரும்பி வந்திருப்பேன். இருந்தாலும் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த படத்தின் ஷூட்டிங் கதைகளை அம்மாவிடம் போனில் சொன்னால், நீ நேரில் வந்து இன்னும் நிறைய கதைகள் சொல்வே பாரு என்று தான் என்னிடம் கூறுவார் என தெரிவித்த ராபர்ட் மாஸ்டர்.
மேலும் எங்கள் பழைய பிரச்னைகளை அம்மாவிடம் சொன்ன போதெல்லாம், துஷ்டனை கண்டால் தூர விலகு, இன்னும் அனுபவிப்பே பாரு என்றுதான் சொல்வார் என்று அந்த நேர்காணலில் ராபர்ட் மாஸ்டர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். தனது பழைய பெஸ்டி என்ற உறவு முறையில்தான் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் ராபர்ட் மாஸ்டர் உள்ளே வந்திருக்கிறார் .
ஆனால் இந்த படத்தை இயக்கும் டைரக்டராக தான் ராபர்ட் மாஸ்டர் உள்ளே வந்திருக்கிறார். ஆனால் வெளிநாடு ஷூட்டிங் சென்றதும் அங்கே பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு அவரை கதாநாயகனாக்கி விட்டு இயக்குனராக வனிதா விஜயகுமார் மாறி தன்னை ஏமாற்றியதை, ராபர்ட் மாஸ்டரே தெளிவாக கூறியிருக்கிறார்.

