சாப்பாடுக்கு பிச்சை எடுக்கும் அமெரிக்கா… இழக்கும் வல்லரசு அந்தஸ்து… தரமான சம்பவம் செய்த மோடி…

0
Follow on Google News

இந்தியா மீது அமெரிக்கா விதித்த கூடுதல் வரி காரணமாக, கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. மருந்துகள், மின்னணு சாதனங்கள், மற்றும் ஜவுளி போன்ற முக்கிய இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா பெரும் வரிகளை விதித்து, கடுமையான பொருளாதார பழிவாங்கல் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்த செயல் இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யா உடனான நெருக்கத்தை அதிகரித்து உள்ளது.

அமெரிக்காவிற்குத் தேவையான generic மருந்துகளில் 20%-க்கும் அதிகமானவை இந்தியாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, அந்நாட்டின் சுகாதார அமைப்பை நிலையற்றதாக்கும் என்று அஞ்சப்படுகிறது. மருந்துகள் விலை உயர்வு, மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை ஆகிய சிக்கல்கள் அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக நாடுகளிடம் பகையை ஏற்படுத்தி கொண்ட அமெரிக்காவுக்கு எல்லா பக்கமும் இருந்து தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு 35% திடீர் வரி விதித்ததால், இதன் விளைவாக, அமெரிக்காவில் உருளைக்கிழங்கு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. விநியோக சங்கிலியில் ஏற்பட்ட இந்த திடீர் சிக்கலால் அமெரிக்க உணவகங்கள் உருளைக்கிழங்கு சார்ந்த உணவுகளின் அளவை குறைத்து வருகின்றன.

அமெரிக்காவின் இந்த வர்த்தக மோதலுக்கு பதிலடியாக, கனடா அமெரிக்காவிற்கான உருளைக்கிழங்கு ஏற்றுமதியை நிறுத்தியது, மேலும் ஆசியா நாடுகளுக்கு அதிக அளவு உருளை கிழங்கு ஏற்றுமதியை தொடங்கியுள்ளது கனடா. மெக்சிகோ ஏற்கெனவே அமெரிக்காவிற்கான தக்காளி ஏற்றுமதியை நிறுத்திவிட்ட நிலையில், கனடாவும் உருளைக்கிழங்கு ஏற்றுமதியை நிறுத்தியதால் அமெரிக்க சந்தைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

உருளைக்கிழங்கு, தக்காளி உள்பட அத்தியாவசியமான உணவு பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதால் அமெரிக்க மக்கள் டிரம்ப் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர். ஒரு நாடு வல்லரசாக இருந்து என்ன செய்ய? அந்த நாட்டு மக்களுக்கு சாப்பாடு கூட கிடைக்கவில்லை என்றால் வல்லரசு என்ற புகழ் மட்டும் இருந்து ஒன்றுக்கும் பயன்படாது’ என ஆத்திரத்துடன் தங்களது கருத்துக்களை அமெரிக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்களுக்கு கனடா அதிக வரி விதிக்கிறது. இந்த வரி சில சமயங்களில் 300% வரை உயரும். இது அமெரிக்க விவசாயிகளுக்கு ஒரு பெரும் தடையாக அமைத்துள்ளது. அமெரிக்க விவசாயிகள் கனடாவிற்கு ஏற்றுமதி செய்யும் பால் பொருட்களில், குறிப்பாக சீஸ் மற்றும் பால் பவுடர் போன்ற பொருட்களுக்கு, கனடா தனது இறக்குமதி ஒதுக்கீட்டை கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது.

இதன் விளைவாக, ஏற்றுமதி செய்ய முடியாத அதிகப்படியான பால், பண்ணைகளிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் வேறு வழியின்றி, பல பில்லியன் டாலர் மதிப்புள்ள பால் பொருட்களை வீணாகக் கொட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.மொத்தத்தில் அமெரிக்கா தனது தவறான வர்த்தக கொள்கைகளால் வல்லரசு என்ற பிம்பத்தை ஒரு பக்கம் இழந்து வருகிறது.