தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 2006 முதல் 2011 வரை நடந்த திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்தார், அப்போது அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், இந்த 2006 முதல் 2011வரையிலான திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் தமிழக முழுவதும் மக்கள் இருந்தனர்.
இதனால் தமிழக முழுவதுமே திமுகவுக்கு ஒரு பாதகமான சூழல் உருவானது. இப்படி ஒரு சூழலில் துணை முதல்வராக இருந்த மு க ஸ்டாலின் 2011 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 2244 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு செய்து மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார் என்று அப்போது அவரை எதிர்த்து தோல்வியை தழுவிய அதிமுகவைச் சேர்ந்த சைதை துரைசாமி வழக்கு தொடுத்தார். நீண்ட காலமாக இந்த வழக்கு பல கட்டங்களை தாண்டி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்று தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை கடந்த முறை வந்தபோது முதல்வர் மு க ஸ்டாலின் தரப்பில் சுமார் 16 மூத்த வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள், அப்படி மு க ஸ்டாலினுக்கு ஆஜரான வழக்கறிஞர்களின் ஒருவர் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய எவ்வளவோ நீதிமன்றத்தில் வாதாடியும் பலன் அளிக்கவில்லை. அதே நேரத்தில் சைதை துரைசாமியும் மிக திறமையான ஒரு வழக்கறிஞரை தனக்கு நியமித்து வாதாட வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் 2011 சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் அப்போது முறையீடு செய்து தான் வெற்றி பெற்றார் என்பதற்கு தங்களிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கிறது என நீதிமன்றத்தில் தெரிவித்த சைதை துரைசாமி தரப்பு வழக்கறிஞர். இதை சமர்ப்பிக்க எங்களுக்கு இரண்டு நாட்களாவது நீதிமன்றம் நேரம் ஒதுக்கி கேட்க வேண்டும். அப்போதுதான் எங்களால் இந்த ஆதாரத்தை முழுமையாக விளக்கி நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் என்று சைதை துரைசாமி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு கோரிக்கையாக வைத்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதி வரும் ஜனவரி மாதம் தொடர்ந்து மூன்று நாட்கள் மாலை இரண்டு மணி முதல் 4.30 மணி வரை எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் இரண்டரை மணி நேரம் உங்களுக்கு நான் ஒதுக்கி தருகிறேன் என்று தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு க ஸ்டாலின் 2011 இல் வெற்றி வெற்றதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என சைதை துரைசாமி தொடுத்துள்ள வழக்கு தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.
ஒருவேளை மு க ஸ்டாலின் முறையீடு செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர் முதல்வர் பதவியை இழக்க நேரிடும் என்றும், மேலும் வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் கூட உருவாகலாம், அதே நேரத்தில் அடுத்த ஆறு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாதபடி கூட சட்டத்தில் இடம் இருக்கு என்றும், சிறை தண்டனைக்கு கூட வழிவகுக்கும் என்கின்றார்கள் சட்ட வல்லுநர்கள்.
ஆனால் 2011 கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் மு க ஸ்டாலின் முறைகேடு செய்து தான் வெற்றி பெற்றார் என்று நிரூபித்தால் மட்டுமே முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இல்லையென்றால் இந்த வழக்கின் தீர்ப்பு முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சாதமாக கூட மாறலாம் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

