உனக்கு சங்கு தான்… இந்த பக்கமே வராத … ஜோதிமணியை சங்கு ஊதி ஓட ஓட விரட்டிய கரூர் தொகுதி மக்கள்…

0
Follow on Google News

கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்டு செந்திபாலாஜி தயவில் வெற்றி பெற்ற ஜோதிமணிக்கு இம்முறை சீட் வழங்க கூடாது என , கரூர் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியான திமுகவினர் என அனைவருமே தங்கள் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தெரிவித்து வந்தனர். ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என கரூர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரத்தத்தில் கடிதம் எழுதி காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பினார்கள்.

மேலும் அகம்பாவத்தில் கட்சியை அழித்துக் கொண்டு இருக்கிறார். ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் போது பலரிடம் பணம் வசூல் செய்துவிட்டு கட்சியினருக்கு தங்குவதற்குக் கூட இடம் ஏற்பாடு செய்யவில்லை என காங்கிரஸ் கட்சினரே அடுக்கடுக்காக ஜோதிமணி பல குற்றசாட்டுகளை வைத்திருந்த நிலையில் தனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கும் என டெல்லியில் உள்ள தன்னுடைய செல்வாக்கை வைத்து கரூர் தொகுதியில் சீட் வாங்கிட்டு வந்தார் ஜோதிமணி.

இந்நிலையில் ஜோதிமணிக்கு மீண்டு கரூர் தொகுதியில் சீட் ஒதுக்கப்பட்டதுன், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கரூர் திமுகவினருக்கு கோபம் ஏற்படுத்தியிருந்தாலும், எங்களுக்கு எவ்வளவு எளிதில் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என கரூர் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். மக்களை சந்தித்து பிரச்சாரத்தை தொடங்கிய ஜோதிமணிக்கு, செல்லும் இடமெல்லாம் என்னமோ சொல்வாங்களே… ஆம் அது தான் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜோதிமணி கோடங்கிபட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பிரசாரம் செய்தார். பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த போது அவரை ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த சமயத்தில் கையில் ஆரத்தியுடன் நின்ற பெண் ஒருவர் ஜோதிமணியிடம, கடந்த தேர்தலில் ஓட்டு கேட்டபோது உங்களை பார்த்தோம். அதன்பிறகு இப்போது மீண்டும் ஓட்டு கேட்க வந்ததால் உங்களை பார்க்கிறோம்.

இவ்வளவு நாள் ஏன் வரவில்லை? ஓட்டு கேட்க மட்டும் ஏன் வருகிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க, அங்கிருந்த திமுக நிர்வாகிகள் நிலைமை சரியில்லை, இடத்தை காலி செய்யுங்க என முணுமுணுத்தவர்கள், ஜோதிமணியை எங்கிருந்து பத்திரமாக அழைத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி செல்லும் இடமெல்லாம் பொதுமக்களிடம் செமத்தியா வாங்கி வரும் ஜோதிமணி.

மக்கள் மனதில் அழுகை நாடகத்தை அரங்கேற்ற, இதெல்லாம் சிவாஜி காலத்திலே பார்த்தாச்சு கிளம்பு கிளம்பு என கிண்டல் செய்து சிரித்தனர். என்னடா இது ஜோதிமணி பொழப்பு கரூர் தொகுதியில் சிரிப்பா சிரிக்குதே, என பார்த்தால், தற்பொழுது மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மருங்காபுரி அருகே உள்ள அடைக்கம்பட்டி என்ற கிராமத்திற்கு வாக்கு சேகரிக்கச் ஜோதிமணி சென்றார்.

அப்போது அங்கே ஜோதிமணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவ்வூர் இளைஞர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என அனைவரும் பீப்பி ஊதியவாறு அவர் காரை நோக்கி முற்றுகையிடும் நோக்கில் சென்றுள்ளனர். அதனைக் கண்டு சுதாரித்த ஜோதிமணி, அந்த ஊரில் வாக்கு சேகரிக்கச் செல்லாமல், காரை விட்டு இறங்காமலேயே உள்ளே அமர, காரை சுற்றி சங்கு ஊதுவது போன்று பீப்பி ஊதி எதிர்ப்பை தெரிவித்தனர் அம்மக்கள்.

காரை விட்டு இறங்காமலே சென்ற ஜோதிமணி காரை பின் தொடர்ந்து பீப்பி ஊதி ஜோதிமணியை ஓட ஓட விரட்டிய அப்பகுதி மக்கள் இது உனக்கு இந்த தேர்தலில் நாங்க ஊதும் சங்கு என தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். இப்படி ஜோதிமணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஊருக்குள் நுழைய முடியாமல் ஒரு பக்கம் விரட்ட, மறுப்பக்கம் கரூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு கரூர் மக்கள் கொடுக்கும் உற்சாக வரவேற்பு, இம்முறை கரூர் தொகுதியில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக பிரகாசமா இருப்பதை பார்க்க முடிகிறது.