பாஜகவுக்கு ஆதரவாக மாறிய தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார்… சீட் கொடுக்காத விரக்தியில் உள்ளடி வேலையா.?

0
Follow on Google News

கடந்த முறை தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்பி செந்தில்குமாருக்கு இம்முறை மீண்டும் போட்டியிட சீட் வழங்கவில்லை, இந்நிலையில் இம்முறை திமுக சார்பில் மணி என்பவருக்கு திமுக சார்பில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி இந்த தொகுதியில் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாக தர்மபுரி தொகுதி மாறியுள்ளது.

இந்த தொகுதியில் பாமக – திமுக ஆகிய இருவருக்கும் நேரடி போட்டியாக அமைத்துள்ளது, அதிமுக மூன்றாவது இடத்தை பிடித்தாலும் டெபாசிட் வாங்குமா என்பது சந்தேகம் தான் என்கிறது தர்மபுரி தேர்தல் களம். பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி அதிக வாக்கு விதியசத்தில் வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்பும் தர்மபுரி தொகுதியில் அமைத்துள்ளது.

இந்நிலையில் தர்மபுரி தொகுதியில் மீண்டும் போட்டியிட கடைசி வரை சீட் கேட்டு போராடிய சீட்டிங் எம்பி செந்தில்குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது, குறிப்பாக எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்பதற்காக தன்னுடைய ஏற்பாட்டில் தர்மபுரி தொகுதியில் கூட்டம் போட்டு, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளை அழைத்து மேடையில் தன்னை பற்றி புகழ் பாட வைத்த செந்தில்குமாருக்கு, நீ என்ன குட்டிக்கரணம் போட்டாலும் உனக்கு சீட் இல்லை என திமுக தலைமை கல்தா கொடுத்தது.

இந்நிலையில் தர்மபுரி தொகுதியில் தேர்தல் பணியில் டாக்டர் செந்தில்குமார் மேற்கொள்வதாக வெளியில் காட்டி கொண்டாலும் கூட, தனக்கு சீட் கிடைக்கவில்லை என்கிற விரக்தி அவருக்குள் இருப்பதாகவே தர்மபுரி திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது செந்தில்குமார் போட்ட ஒரு பதிவு தனக்கு சீட் கிடைக்கவில்லை என்கிற விரக்தியில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

அவரின் பதிவில், தர்மபுரி மக்களுக்கு மேலும் இரு நற்செய்தி. தேர்தல் வாக்குபதிவு முடிந்த உடன் மேலும் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் தர்மபுரி வழியாக செல்லும், 1) மதுரை- தர்மபுரி-பெங்களூரு வந்தே பாரத், 2) எர்ணாகுளம்-தர்மபுரி-பெங்களூரு வந்தே பாரத் என செந்தில்குமார் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வந்தே பாரத் ரயில் குறித்து தர்மபுரி மக்களுக்கு நற் செய்தி என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தர்மபுரி மக்களே பாஜக அரசு தேர்தலுக்கு பின்பு தர்மபுரி வழியாக இரன்டு வந்தே பாரத் ரயிலை இயக்க இருக்கிறது, அதனால் நன்கு யோசித்து பாஜக கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு வாக்களியுங்கள் என மறைமுகமாக திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி தனக்கு சீட் கிடைக்காத விரக்தியில் தன்னுடைய உள்ளடி வேலையை காட்டுகிறார் டாக்டர் செந்தில்குமார் என அரசியல் பார்வையாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.