மது பார்ட்டியில் இளையராஜா… போதையில் பளார் என அறைந்த பாரதிராஜா… அன்று இளையராஜா எடுத்த அதிரடி முடிவு…

0
Follow on Google News

நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ‘இளையராஜா’ என்றே தலைப்பிடப்பட்டுள்ள, “இளையராஜாவின் பயோபிக்கை இயக்குவதற்காக தனுஷ் தனக்கு பிடித்த இயக்குநர்கள் சிலரை இளையராஜாவிடம் அனுப்பி வைக்க முடிவு செய்திருக்கிறார். அதில் மிக முக்கியமானவராக மாரி செல்வராஜ் இருந்திருக்கிறார்.

ஆனால் மாரி செல்வராஜின் பெயரை சொல்லும்போதே இளையராஜா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனை தொடர்ந்து இந்தப் படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். முன்னதாக இந்தப் படத்தை இயக்குநர் பால்கி இயக்குவார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின. அதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தைச் சேர்ந்த இளையராஜா தனது அண்ணன் பாவலரின் பாட்டுக்குழுவில் இணைந்து இடதுசாரிகளின் கூட்டங்களில் சிறுவயதில் பாடி வந்தார். பின்னர் சினிமாவில் பாட ஆசைப்பட்ட இளையராஜா, எப்படி சென்னை வந்து, வாய்ப்பு தேடி வெற்றிகரமான இசையமைப்பாளராக உருவானார் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக உள்ளது.

1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இதனையடுத்து பலரும் இளையராஜாவை சமூகவலைதளங்களில் கொண்டாடி வரும் நிலையில், சிலர் அவரின் நெகட்டிவான பக்கம் தொடர்பான வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நிறைய பிரபலங்கள் அவர் பத்தி பேட்டி கொடுத்துட்டு வருகின்றனர். அதன்படி வலைப்பேச்சு அந்தணன் பேசியிருக்கும் விஷயம் இப்போது வைரல் ஆகி வருகிறது.

அவர் அந்த வீடியோவில் பேசியதாவது, “இளையராஜா பண்ணைபுரத்தில் இருந்து வந்து கஷ்டப்பட்டு, அவரோட முதல் பாட்டு ஹிட் ஆகுறதோட அந்த படம் முடிய வாய்ப்பு இருக்கு. பயோபிக் படம் என்பது 200 வருஷம் கூட கழிச்சு பாக்க போற விஷயம். அதனால் அதில் இளையராஜா பற்றிய சர்ச்சை ஏதும் இருக்காது” என்று கூறினார். மேலும் பேசிய அவர், “நடிகர் பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் வீட்டில் ஒருமுறை இளையராஜாவின் பிறந்தநாள் பார்ட்டி கோலாகலமாக நடந்தது.

அதில் பலரும் கலந்துகொண்டார்கள். அந்தப் பார்ட்டிக்கு ரஜினிகாந்த் தாமதமாக வந்தார். அப்போது ஏன் டா லேட்டு என ரஜினியிடம் பாரதிராஜா கேட்டிருக்கிறார். அப்போது ரஜினிகாந்த் நக்கலாக ஒரு பதிலை சொல்லியிருக்கிறார். உடனே பாரதிராஜாவுக்கு கோபம் வந்து ரஜினிகாந்த்தை கன்னத்திலேயே அறைந்துவிட்டார். அது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அன்று முதல் குடிக்கவே மாட்டேன் என்று சபதம் எடுத்த இளையராஜா அதற்கு பிறகு மது அருந்துவதையே நிறுத்திவிட்டார். இப்படி ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயங்கள் இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. அதனையெல்லாம் சரியாக இளையராஜாவின் பயோபிக்கில் வைத்தால் நன்றாகவே கவனம் பெறும். ஆனால் சர்ச்சையை தொடாமல் இளையராஜாவை போற்றும்படி தனுஷ் படமாக வந்தால் கண்டுகொள்ளமாட்டார்கள்” என்றார்.