11 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்த பாஜக… உளவு துறை கொடுத்த ரிப்போர்.. செம்ம குஷியில் பாஜக தலைமை… எந்தத்த தொகுதி தெரியுமா.?

0
Follow on Google News

நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நாளுக்கு நாள் தேர்தல் களம் மாறி வருவது. ஆளும் திமுக அரசுக்கு மிக பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிக்கும் திராவிட கட்சிக்கும் இடையிலான கடும் போட்டி தமிழகத்தில் மிக பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் தமிழ்கத்தில் எத்தனை தொகுதிகளில் பாஜக வெற்றி பெரும் என்கிற தகவலை உளவு துறை மூலம் அறிந்து கொண்ட பாஜக டெல்லி தலைமை செம்ம குஷியில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் சுமார் 11 தொகுதிகள் பாஜக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் உறுதியாக வெற்றி பெரும் என்றும், மேலும் 5 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவி வருவதையும், மேலும் ஒவ்வொரு தொகுதிகளில் எத்தனை சதவிகிதம் வாக்குகளை பாஜக பெரும் என்கிற ரிப்போர்ட்ம் உளவு துறை மூலம் பாஜக டெல்லி தலைமைக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் பாஜக டெல்லி தலைமைக்கு உளவுதுறை கொடுத்த ரிப்போர்ட் பாஜக வட்டாரத்தில் கசிய தொடங்கியுள்ளது. அதில் பாஜக உறுதியாக வெற்றி பெற இருக்கும் பத்து தொகுதியில், பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை, பொள்ளாச்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வசந்தராஜன், சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியானி.

திருநெல்வேலியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், கரூரில் ஜோதிமணியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் ஆகிய 6 பாஜக வேட்பாளர்களும், மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களான, வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், தென்காசியில் போட்டியிடும் ஜான் பாண்டியன், தேனி தொகுதியில் போட்டியிடும் TTV தினகரன், ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம், தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் சௌமியா அம்புமணி ஆகிய பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என மொத்தம், இந்த 11 தொகுதியில் பாஜக கூட்டணி உறுதியான வெற்றியை பெரும் என உளவு துறை பாஜக டெல்லி தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாகவும்.

மேலும் கடுமையாக போட்டி நிலவும் 5 தொகுதிகளில், பாஜக போட்டியிடும் மத்தியசென்னை, தென் சென்னை, கன்னியாகுமரி மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் கடலூர், பெரம்பலூர் ஆகிய இந்த 5 தொகுதியிகளில் பாஜக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி இடையே மிக கடுமையான போட்டி நிலவி வருவதை குறிப்பிட்டு இந்த தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பாஜகவுக்கு உள்ளது ஆனால் அந்த வெற்றியை கடுமையாக போராடி பெறவேண்டிய சுழலில் தேர்தல் களம் உள்ளது,

அதே நேரத்தில் கடும் போட்டியாக இருக்கு இந்த 5 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளதை சுட்டி காட்டி, அந்த வகையில் இந்த 5 தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என கணிக்க முடியாதபடி கடும் போட்டி நிலவி வருவதாக டெல்லி பாஜக தலைமைக்கு உளவு துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சுமார் 11 தொகுதிகளில் தமிழகத்தில் பாஜக உறுதியான வெற்றியை பெரும் மேலும் கடும் போட்டி நிலவும் தொகுதிளுக்கும் பாஜகவுக்கு சாதகமாக மாறி வருகிறது, இந்நிலையில் உளவு துறை கொடுத்த ரிப்போர்ட்டை விட பாஜக வெற்றி பெரும் தொகுதிகள் அதிகரிக்கும் என்பதால், செம்ம குஷியில் பாஜக தலைமை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.