தமிழக வீரர் நடராஜனை திட்டமிட்டு புறக்கணிக்கும் இந்திய கிரிக்கெட் போர்ட்… நடந்ததை போட்டுடைத்த முத்தையா முரளிதரன்…

0
Follow on Google News

தமிழகத்தில் சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் சன்ரைசர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது சிறந்த பந்துவீச்சின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் அபாரமாக பந்து வீசி தனது முத்திரையை பதித்தார். அதன் பிறகு காயம் காரணமாக தொடர்ந்து அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.

அதற்குப் பிறகு சில சீசனங்களில் தடுமாறி வந்த நடராஜன் இந்த சீசனில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே வரும் டி 20 உலக கோப்பைக்கு இவரை நிச்சயம் இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தன்னுடைய தொடக்க கால அனுபவங்களை நடராஜன் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் சென்னை மைதானத்தில் தன்னை உள்ளே அனுமதிப்பார்களா? என்றும் நானெல்லாம் விளையாடுவேனா?என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை, ” ரயிலில் சேப்பாக்கம் வழியாக செல்லும்போது சிதம்பரம் மைதானத்தை பார்ப்பேன். அப்போது இந்த மைதானத்திற்குள் நம்மை விளையாட அனுமதிப்பார்களா? நானெல்லாம் இங்கு விளையாடுவேனா? என்று நினைத்து பார்த்து இருக்கிறேன்.

ஊருக்கு செல்லும் பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டியை பார்த்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் எனக்கு இங்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்து இருந்தார் நடராஜன். இந்நிலையில், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

பேட்டர்ஸ் இந்த தொடரில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அடுத்த ஆண்டு பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது. அதிக ரன்கள் அடிப்பதற்கு இம்பாக்ட் பிளேயர் விதியும் ஒரு காரணம். பந்து வீச்சாளர்கள் விட பேட்டிங் செய்பவர்களுக்கு இம்பேக்ட் விதி மிக உதவியாக உள்ளது. வீரர்கள் அழுத்தம் இன்றி விளையாட அது உதவுகிறது” என்றார். இதையடுத்து, உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்படுவரா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த முத்தையா முரளி டேரன்.

நான் வேறொரு நாட்டை சேர்ந்தவன். நான் இந்த விஷயத்தில் பதில் சொல்வது சர்ச்சையாக முடிந்துவிடும். நடராஜன் விக்கெட்டுகள் எடுக்கும்போது மட்டும்தான் அவர் நன்றாக ஆடுகிறார் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், அவர் கடந்த 5 ஆண்டுகளாகவே நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் அவரிடம் மீடியாக்களின் மீது அதிக கவனம் செலுத்தாதே எனச் சொல்லியிருக்கிறேன்.

விக்கெட் எடுக்கும்போது அவரைப் பற்றிப் பேசுகிறார்கள். மற்ற சமயங்களில் அமைதியாக இருக்கிறார்கள். கடந்த சீசனில் அவருக்கு காயங்கள் இருந்தன. இந்த சீசனில் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். நன்றாக வீசி விக்கெட்டுகளும் எடுக்கிறார். இந்திய அணிக்கு அழைக்கப்படுவாரா எனக் கேட்கிறீர்கள். அதெல்லாம் தேர்வாளர்களைப் பொறுத்தது. ஆனால், நடராஜன் அதற்குத் தகுதியானவர் என முத்தையா முரளி தரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியை இறுதி செய்வதற்கு முன்னதாக, பிசிசிஐ மும்பையில் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியது அதில் தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக விளையாண்டினால் கூட இந்திய அணிக்குள் வந்து விட கூடாது என்பதில் உறுதியாக அஜித் அகர்கர் உட்பட பலர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.