துரைமுருகன் பற்றி வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தது யார் தெரியுமா.? பிரசன்னாவுக்கு ஆப்பு வைத்த துரைமுருகன்.!

0
Follow on Google News

திமுக பேச்சாளர் பிரசன்னா அக்கட்சியில் இருந்து படி படியாக ஓரம்கட்டப்பட்டு தற்போது முற்றிலுமாக திமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதற்கு முக்கிய காரணம் திமுக பொது செயலாளர் துரைமுருகன் என்று கூறப்படுகிறது, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த திமுக பேச்சாளர் பிரசன்னா நேர்முக தேர்வுக்கு அண்ணா அறிவாலயம் வந்த போது வாசலிலே நீயெல்லாம் இதுக்கெல்லாம் ஆசை படலமாக என்று, கடுமையாக திட்டி பிரசன்னாவை விரட்டி விட்டார் துரைமுருகன் என்று அப்போது செய்திகள் வெளியாகின.

மேலும் பிரசன்னாவின் வரம்பு மீறிய பேச்சால் திமுகவுக்கு மிக பெரிய அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக தமிழகம் முழுவதும் உள்ள திமுக முக்கிய தலைவர்கள் திமுக தலைமையிடம் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது புகார் தெரிவிக்க, பிரசன்னாவை தேர்தல் முடியும் வரை எந்த ஒரு தொலைக்காட்சியிலும் பங்கு பெறக்கூடாது என துரைமுருகனிடம் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து பிரசன்னாவை தொடர்பு கொண்ட துரைமுருகன் தேர்தல் முடியும் வரை கட்சி நிகழ்ச்சி மற்றும் தொலைக்காட்சியில் உன்னை நான் பார்க்க கூடாது என கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தலைமைறைவாக இருந்த பிரசன்னா, தேர்தலின் போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த அன்று தனக்கு நெருங்கிய நண்பர்களை அழைத்து விருந்து வைத்து கொண்டாடிய தகவல் துரைமுருகனுக்கு சென்றுள்ளது, மேலும் துரைமுருகன் பற்றி வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தது திமுகவினர் தான் என்கிற செய்தியும் வெளியானது, சமீபத்தில் துரைமுருகன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூட நமக்குள் பிரச்சனை என்றால் சரி செய்து கொள்வோம், அதற்காக வருமான வரித்துறையிடம் போட்டு விட வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக பேச்சாளர் பிரசன்னாவை முற்றிலுமாக திமுகவில் இருந்து ஒழித்துக்கட்ட முடிவு செய்த துரைமுருகன், நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியே வந்த ராஜீவ்காந்தியை திமுகவில் இனைந்து பிரசன்னாவுக்கு ஆப்பு வைக்க முடிவு செய்து, ரஜீவ்காந்தியை திமுகவில் இணைக்க பெரும் முயற்சி எடுத்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் சமீபத்தில் திமுகவில் இணைந்த ராஜிவ் காந்திக்கு முக்கியத்துவம் அளித்து வருவது குறிப்படத்தக்கது,

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார் அறிக்கையில், சமீபத்தில் கட்சியில் இணைந்த ராஜீவ்காந்தி திமுகவின் செய்தி தொடர்பு இணைச் செயலாளராக நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார், இந்நிலையில் கட்சி பொதுக்கூட்டம் மற்றும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பிரசன்னாவுக்கு பதில் ரஜீவ்காந்தியை பயன்படுத்தி கொள்ள திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, ராஜிவ் காந்தி பங்கேற்க முடியாத சுழலில் பிரசன்னாவுக்கு வாய்ப்பு தரலாம் என்று திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.