வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் ஆளும் கட்சியான திமுக , மீண்டும் ஆட்சியை பிடிப்பது கடினம் என்கிறது அரசியல் களம். மூத்த அமைச்சர்கள் மற்றும் மூத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரும் தேர்தலில் சீட் இல்லை என முடிவு செய்துள்ள திமுக, 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வயதை காரணம் காட்டி ஓரம் கட்டப்படும் முன்னாள் அமைச்சர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சீட் வாங்குவதில் போட்டா போட்டி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு அவருடைய மகனுக்கு சீட் வாங்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது, திமுக அமைச்சார் ஏ வ வேலு அவருக்கும் சீட் வேண்டும், அவருடைய மகனுக்கும் சீட் வேண்டும் என காய்களை நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு இம்முறை சீட் வழங்கப்படாது என்பதால், தனக்கு பதில் தன்னுடைய மகனுக்கு சீட் கேட்டு கொண்டிருக்கிறார் பொன்முடி.

திண்டுக்கல் மாவட்ட அமைச்சர் ஐ பெரிய சாமி தனக்கு சீட் வேண்டாம் என அவராகவே ஒதுக்கி கொள்வதாக தெரிவித்துள்ளதாகவும், ஆனால் தன்னுடைய மகன் ஐ பி செந்தில்குமாருக்கு திமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும் அமைச்சர் பதவி வேண்டும் என காய்களை நகர்த்தி வருகிறார் ஐ பெரிய சாமி என கூறப்படுகிறது. மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் விசிக மற்றும் மதிமுக இரண்டு கட்சிகளையும் வெளியேற்றிவிட்டு பாமக மற்றும் தேமுதிக இரண்டையும் உள்ளே கொண்டுவருவதற்கு திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பல தனியார் நிறுவனங்கள் தனி தனியாக நடத்திய சர்வே ரிப்போர்ட் திமுகவுக்கு இடியாய் விழுந்துள்ளது என்று சொல்லும் அளவுக்கு அமைத்துள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள். அதாவது வேனும் 2026 சட்டசபை தேர்தல் கள நிலவரம். சென்னை திமுக கோட்டை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் அந்த கோட்டையிலே ஓட்டை விழும் அளவுக்கு சென்னையில் திமுக சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது.
கடந்த முறை சென்னை மொத்தமும் திமுக வெற்றி பெற்று இருந்த NILAYIL மயிலாப்பூர், தி நகர் போன்ற சட்டமன்ற தொகுதிகளில் திமுக தோல்வியை சந்திக்கு நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொங்கு பகுதியிலும் திமுக கடினமாக போராட வேண்டிய ஒரு சூழல் தான் உருவாகி உள்ளது என்றும், பல மூத்த அமைச்சர்கள் தோல்வியை வரும் 2026 சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்திப்பார்கள் என தனியார் நிறுவனங்கள் எடுத்த சர்வே ரிப்போர்ட் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக காட்பாடி தொகுதியில் துரைமுருகன் தோல்வியை தழுவ வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மொத்தம் தமிழக முழுவதும் உள்ள 234 தொகுதிகளில், 60 தொகுதி வரை தான் திமுக வெற்றி பெரும் என்றும், சுமார் 40 தொகுதி வரை கடினமாக போராட வேண்டிய சூழல் திமுகவுக்கு உண்டு, மேலும் சுமார் 45 முதல் 50 தொகுதி கடும் இழுபறியிழும், சுமார் 60 தொகுதியில் திமுக உறுதியாக தோல்வி அடையும் என்றும் தனியார் நிறுவனங்கள் எடுத்த சர்வே ரிப்போர்ட் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் திமுக உறுதியாக 60 தொகுதிகளில் தான் வெற்றி பெரும் என்கிற சூழல் தற்போதைய தமிழக அரசியல் களம் உணர்த்துகிறது. இந்த செய்தி திமுக தலைமைக்கு இடியாய் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் பாஜக வரும் 2026 சட்டசபை தேர்தலில் குறைந்தது 50 முதல் 60 தொகுதிகளில் போட்டியிடும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாங்கிய வாக்கு சதவிகித அடிப்படையில் 50 தொகுதிக்கு 1 தொகுதி கூட குறையாமல் பாஜக போட்டியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேமுதிக திமுக பக்கம் சாய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், பாமகவில் அன்புமணி பாஜக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் செல்ல முயற்சித்து வருவது பாமக உள்ளே மிக பெரிய குழப்பம் நீடித்து வருவது குறிப்பிடதக்கது.