பெரியார் சிலைக்கு பூஜை செய்வதோடு திமுக நிறுத்தி கொள்ள வேண்டும்.. பாஜக எம்.எல்.ஏ எச்சரிக்கை..!

0
Follow on Google News

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் தெற்குத்தொகுதி பிஜேபி சட்டமன்ற உறுப்பினரான வானதிசீனிவாசன் திமுக தொடர்ந்து ஹிந்துக்களின் மனதை காயப்படுத்தி வருகிறது என பகிரங்க குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 2006-2011 திமுக கலைஞர் ஆட்சியில் இந்த மததசார்பற்ற அரசு நடராஜர் கோவிலை கையகப்படுத்திக்கொண்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற தீட்சிதர்கள் ஹிந்துக்களின் உரிமைகளை மீட்டெடுத்துள்ளனர்.

தற்போது ஒரு தசாப்தத்திற்கு பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே நடராஜர் கோவிலை அபகரிக்க அறத்திற்கு புறம்பான அணைத்து வழிகளிலும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறது. திருக்கோவில் ஆய்வு என்ற பெயரில் ஹிந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலுக்கு ஆய்வு நடத்த குழுவை அனுப்புகிறது.

இப்படி அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலுக்கு ஆய்வுக்குழுவை அனுப்பிவைப்பது எவ்விதத்தில் நியாயம். சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் தவறுகள் இருப்பின் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆட்சேபணையில்லை.

ஆனால் திமுக கட்டுப்பாட்டில் உள்ள அறநிலையத்துறை தங்களது கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலுக்கு ஆய்வுக்குழுவை அனுப்புவது நேரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுவது ஹிந்துக்களின் மனதை காயப்படுத்தும். பெரியார், அண்ணாதுரை கலைஞர் போன்றோர்களின் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் பூஜை செய்வதோடு திமுகவின் நின்றுகொள்ளவேண்டும்” என அந்த அறிக்கையில் வானதி அவர்கள் தெரிவித்துள்ளார்.