உடைகிறது திமுக காங்கிரஸ் கூட்டணி.! காங்கிரஸ் கட்சிக்கு செல்ல தயாராகும் செந்தில் பாலாஜி.! என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் பிடிவாதமாக இருப்பதால், திமுக காங்கிரஸ் கூட்டணி உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து தானாக விரட்டிவிட ஸ்டாலின் முடிவு செய்துள்ளார், அதன்படி புதுச்சேரி திமுக முதல்வர் வேட்பாளராக திமுக எம்பி ஜெகத்ரட்சனை முன்னிறுத்தி அங்கே தேர்தல் பணி ஆற்றி வருகின்றனர் திமுகவினர்,

இது புதுசேரி காங்கிரஸ் கட்சினரை கோவம் அடைய செய்துள்ளது, இந்நிலையில் தாங்கள் கூட்டணியிலிருந்து புறக்கணிக்கப் படுவதை உணர்ந்த காங்கிரஸ் டெல்லி தலைமை தமிழகத்தில் வரும் தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பதற்கான வேலையை தொடங்கியுள்ளது, இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி உடையும் பட்சத்தில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி காங்கிரஸ் கூட்டணிக்கு செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்த பின்பு கரூர் மாவட்டத்தில் திமுகவில் அதிக முக்கியத்துவம் திமுக தலைமை அவருக்கு கொடுத்து வந்தது, இதனால் அதிருப்தி அடைந்த திமுக கரூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடர்ந்து வேலை செய்து வந்தனர், ஒரு கட்டத்தில் செந்தில்பாலாஜி திமுகவில் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கும் வேலையை தொடங்கினார், அவருடைய ஆதரவாளர்களுக்கு திமுகவில் கரூர் மாவட்டத்தில் முக்கியத்துவம் அளிப்பது பாரம்பரியமாக திமுகவின் இருந்து வந்தவர்களை புறக்கணிப்பது என செந்தில் பாலாஜி தொடர்ந்து செய்து வந்ததை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் திமுக தலைமைக்கு புகார் அளித்தனர்.

இதன்பின் செந்தில்பாலாஜி அழைத்து திமுக தலைமையை கண்டித்தது, இதற்குப் பின்பு செந்தில்பாலாஜி திமுக தலைமை மற்றும் கரூர் மாவட்ட திமுகவினரால் கட்டம் கட்டபட்டார், இந்நிலையில் தொடர்ந்து திமுக மீது அதிருப்தியில் இருந்து வரும் செந்தில் பாலாஜி கூட்டணி கட்சியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர், குறிப்பாக கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூர் மாவட்டத்தில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் செந்தில்பாலாஜிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் தேர்தலில் செந்தில் பாலாஜியை எப்படியாவது அறவன்குறிச்சி தொகுதியில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் திமுகவினர் மும்முரமாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது, இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்தால் இது வரை செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் ஆதரவும் இல்லாமல் சென்று விடும், மேலும் கடந்த இடைதேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றிக்கு காரணம் திமுக கட்சி இல்லை, செந்தில் பாலாஜியின் தனிப்பட்ட செல்வாக்கு தான் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி எந்த கட்சிக்கு சென்றாலும் தனக்கு இருக்கும் செல்வாக்குக்கு மரியாதையுடன் நடத்தப்படுவார் என்றும், ஆகையால் எதற்காக திமுகவின் உட்கட்சி பிரச்சனையால் தினம் தினம் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும் என முடிவெடுத்த செந்தில் பாலாஜி, காங்கிரஸ்-திமுக கூட்டணி உடைவது உறுதியானால், காங்கிரஸ் கட்சியை சேந்த கரூர் எம்பி ஜோதிமணி ஏற்பாட்டில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் இணைந்து வரும் சட்டசபை தேர்தலில் அறவன்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .