இந்தியா-சீன எல்லையில் நடப்பது என்ன.? இனிமேல் இந்தியாவால் மட்டுமல்ல உலகின் எந்த நாடுகளாலும் இதை தடுக்கவே முடியாது.!

0
Follow on Google News

இந்திய எல்லைக்குள் சீனா ஒரு புதிய கிராமத்தையே உருவாக்கியிருப்பது, அருணாச்சல பிரதேசத்தில் கிட்டத்தட்ட 101 வீடுகளுக்கும் மேல் உள்ளடக்கிய ஒரு கிராமத்தை சீனா உருவாக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது, அருணாசல பிரதேசத்தில் சீனா புகுந்துவிட்டதாகவும் இந்திய எல்லைக்குள் ஒரு கிராமத்தையே உருவாக்கிவிட்டதாகவும் சில செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, உண்மையில் என்ன நடந்தது என்றால் இதுதான்

சீனா இப்பொழுது தன் திபெத்திய எல்லையில் கவனம் செலுத்துகின்றது சிறிய ரக குடியிருப்புகளை உருவாக்கி அதை ரயில் மூலமும் இன்னும் பல போக்குவரத்து மூலமும் சீனாவின் மத்திய பகுதியிடனும் இணைத்து கொண்டிருக்கின்றது. இதில் ஏராளமான கணக்குகள் சீனாவிற்கு உண்டு, முதலாவது திபெத்தில் வெளிநாடுகள் மூலம் சிக்கல் வராமல் இருக்குமளவு சீன குடிமக்களை அங்கு அமர்த்துவது இரண்டாவது எல்லையில் குடியிருப்புகள் இருந்தால் ராணுவ செலவுகள் குறையும் மாறாக பொருளாதார் சுழற்சி அதிகரிக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா அதை நெருங்காதவாறு அது எங்கள் பகுதி என கத்தி கொண்டே இருக்கலாம், குடியிருப்பு பகுதி என சொல்லிகொண்டே ரகசிய ராணுவ கண்காணிப்பை செய்யலாம், இந்தியா தொடர்ந்து முன்னேற அணை போடலாம், இப்படி ஏக கணக்குகளை கொண்டு திபெத்தின் மேற்கு வடக்கு தெற்கு பகுதியில் குடியிருப்புகளை அமைக்கின்றது சீனா, மற்றபடி இந்திய எல்லைக்குள் அவர்கள் வரவுமில்லை குடியிருப்புகளை கட்டவுமில்லை

அவர்கள் எல்லைக்குள் எதை அவர்கள் கட்டினாலும் இந்தியாவால் மட்டும் அல்ல உலகின் எந்த நாட்டாலும் தடுக்கவே முடியாது, இந்தியாவும் தன் எல்லைக்குள் ஏகபட்ட சாலைகள் மற்றும் சிறிய விமான நிலையங்கள் உள்ளிட்ட ஏகபட்ட கட்டுமானங்களை அப்பக்கம் செய்கின்றது அதை தடுக்க சீனாவாலும் முடியாது பரவிகொண்டிருப்பது சீனா அவர்கள் எல்லைக்குள் கட்டும் சில கட்டுமானங்களின் படங்களன்றி வேறு ஏதும் அல்ல. மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும்