சமூக நீதி பற்றியெல்லாம் திமுக பேசலாமா..? சமூக நீதியின் கதாநாயகன் மோடி…மத்திய அமைச்சர் பேச்சு..

0
Follow on Google News

மதுரை : மதுரை மேலூரில் பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி அரசின் எட்டாண்டு கால சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழ்காத்தக்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் திமுகவுக்கு சமூகநீதி பற்றி பேச அருகதை இருக்கிறதா என்கிற ரீதியில் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது ” தமிழக திமுக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்களுக்கு டம்மியான இலாகாக்களே ஒதுக்கப்பட்டிருக்கிறது. பிஜேபி ஆட்சி செய்யும் ஒவ்வொரு மாநிலத்திலும் பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. திமுகவுக்கும் சமூக நீதிக்கும் துளியும் தொடர்பில்லை.

அண்டைமாநிலமான கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்கு அடுத்துள்ள முக்கியமான துறையான பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி ஒரு பட்டியலின எம்.எல்.ஏவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அதேபோல பிஜேபி ஆளும் மாநிலமான மத்யபிரதேசத்தில் ஒரு பட்டியலினத்தவர் நிதியமைச்சராக பதவி வகிக்கிறார்.

திமுக ஆளும் தமிழகத்தில் மட்டும்தான் பட்டியலினத்தவர்களுக்கு கடைசி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கத்து மாநிலமான ஆந்திராவில் கூட உள்துறை அமைச்சர் பதவி பட்டியலினத்தவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் தான் பட்டியலினத்தவருக்கு சுற்றுலாத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை என கடைசிதுறைகளை மட்டுமே திமுக ஒதுக்கியுள்ளது.

பட்டியலினத்தவர்களுக்கு கடைசிதுறை வழங்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. சமூக நீதி பற்றி பேச முக.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. வருவாய்த்துறை போன்ற முக்கியமான துறைகளை ஏன் முக. ஸ்டாலின் பட்டியலினத்தவர்களுக்கு வழங்கவில்லை. பிஜேபி ஆட்சியில் மட்டும்தான் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதியின் கதாநாயகன் பிரதமர் மோடி மட்டும்தான்.

தமிழகம் என்றுமே ஆன்மீக பூமியாக மட்டுமே உள்ளது. திமுக கூறிவருகின்ற திராவிட மாடல் என்றால் என்ன என்பது மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது. திராவிட மாடல் என எத்தனை தடவை கூறினாலும் ஒருபோதும் அது மக்கள் மத்தியில் எடுபடாது” என மத்திய இணை அமைச்சர் முருகன் அந்த கூட்டத்தில் பேசினார்.