திமுகவின் இந்த செயலை மலர் தூவி பாஜக வரவேற்போம்..! பேராசிரியர் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்டில் காணாமல் போன முக ஸ்டாலின் வீசிய பந்து..!

0
Follow on Google News

குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திகள் இடம் பெறாமல் இருப்பது குறித்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள், மற்றும் திமுக ஆதரவு ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வரும் நிலையில், இது குறித்து உண்மை தன்மை என்ன என்பதை விளக்கும் நோக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ ஓன்று கடந்த இரண்டு தினகளுக்கு முன் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் தெரிவித்ததாவது.

குடியரசு தினவிழாவில் டெல்லியில் நடக்கிற அணிவகுப்பில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படாத அலங்கார ஊர்திகளை தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியதை வரவேற்கிறேன். அந்த அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டவை அல்ல தேர்ந்தெடுக்கப்படாத வை என்பதையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். 29 மாநிலங்கள் இருக்கிற இந்திய திருநாட்டில் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன என்பதை ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்குச் சொல்ல வேண்டும்.

அதிலும் அப்படி தேர்ந்தெடுப்பதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அதன் உறுப்பினர்களின் தேர்வுதான் மத்திய அரசு அமல்படுத்துகிறது என்பதையும் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எந்தெந்த அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பது மத்திய அரசு அல்ல ஒரு நிபுணர்கள் கமிட்டி என்பது தான் உண்மை. தமிழகத்தில் பவனி வரப்போகும் அந்த அலங்கார ஊர்திகளை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஊரிலும் மலர் தூவி வரவேற்போம்.

இந்திய திருநாட்டிற்கு விடுதலையே வேண்டாம் வெள்ளைக்காரர்களை தொடர்ந்து இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டும் என்று சொன்ன திமுக இன்று இந்திய தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர் வீரமங்கை வேலுநாச்சியாரையும் அய்யா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களையும் கட்டபொம்மனையும் காட்சிப்படுத்தி தமிழகத்தின் வீதிகளில் உலா வருகிறார்கள் என்றால் ஒரு தேசியவாதியாக நான் மகிழ்கிறேன்.

இந்திய விடுதலையின் 75வது ஆண்டின் போது ஸ்டாலின் அரசாங்கத்தால் ஈவேரா வையோ, பிடி நாயரோ, தியாகராஜரோ காட்சிப்படுத்த முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரம் வேண்டாம் என்று சொன்ன திமுக இப்படி மாறி விட்டது எனக்கு மகிழ்ச்சிதான் அதேசமயம் மத்திய அரசின் குழு தேர்ந்தெடுகாதது தமிழக அரசின் அலங்கார ஊர்திகளை தானே தவிர அய்யா வ உ சி யையோ வேலுநாச்சியாரை அல்ல…!!

அவர்களெல்லாம் பாரதிய ஜனதா கட்சியின் இதயத் தாமரையில் இடம்பெற்ற மாபெரும் தலைவர்கள்!!! வீரர்கள்!!! அவர்களுக்கு என்றென்றும் பாரதிய ஜனதா கட்சி சிரம்தாழ்த்தி கரம் கூப்பி தொழுகிற இடத்தில் தான் இருக்கும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் உலா வரும் அலங்கார ஊர்தியை பாஜக மலர் தூவி வரவேற்போம் என தெரிவித்துள்ளது, இந்த அலங்கார ஊர்தி விவகாரத்தை அரசியலாக்க துடித்த திமுகவுக்கு பலத்த அடியை ஏற்படுத்தி திமுகவின் அரசியல் ராஜதந்திரம் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமா அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.

எம்பிக்கள், ஜோதிமணி, சு.வெங்கடேசன் பொறுப்பற்ற செயலுக்கு பேராசிரியர் பதிலடி. இது இரண்டு புறமும் கூறுள்ள ஆயுதம்.. இது ஏற்புடையது அல்ல..