எல்லை மீறிய ஐஸ்வர்யா…தூக்கி எறிந்த தனுஷ்…! ஐஸ்வர்யா-தனுஷ் பிரிவுக்கு இது தான் காரணமாம்.!

0

நடிகர் தனுஷ் மிக சிறிய வயதில் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகி, தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்து, தனது 21 வயதில் தன்னை விட வயதில் இரண்டு வருடம் மூத்தவரான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து கொண்ட பின்பு தொடர் தோல்வி படங்களை தனுஷ் கொடுத்து வந்தாலும், ரஜினியின் செல்வாக்கை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் அடுத்தது வாய்ப்புகளை பெற்றார்.

இதன் பின்பு தனக்கென ஒரு இடத்தை பிடித்த தனுஷ் அதன் பின்பு தொடர்ந்து பல்வேறு நடிகைகளிடம் கிசு கிசுக்கப்பட்டார். நடிகைகளுக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து தன் வசப்படுத்தவே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தனுஷ் தொடங்கியதாக சினிமா வட்டாரத்தில் கூறப்பட்ட நிலையில், இதில் நடிகை அமலாபால் உடன் இருந்த நெருக்கம் காரணமாக அமலாபால்- இயக்குனர் விஜய் விவாகரத்து வரை செல்வதற்கு தனுஷ் தான் காரணம் என கூறப்பட்டது.

இப்படி சக நடிகைகளிடம் இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டு ஆட்டம் போடுவது, வெளிநாடு படப்பிடிப்பு என தனக்கு பிடித்த நடிகைகளிடம் சுற்றி வருவது, மனைவி வெளிநாடு சென்று விட்டால் சென்னையிலே சக நடிகைகளை வீட்டுக்கே அழைத்து செல்வது ஏன் தனுஷ் மீது ஏகப்பட்ட கிசு கிசுக்கள் வெளியானது. அந்த வரிசையில் எண்ணற்ற நடிகைகள் முதல் தொலைக்காட்சி தொகுப்பாளினி வரை தனுசுடன் கிசு கிசுக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தனுஷ் வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தி குடும்பத்தில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பிரச்சனை நடந்து வந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தனுஷ் உடன் சில நடிகைகள் தொடர்பில் இருப்பதை அவரது மனைவி ஐஸ்வர்யா கையும் களவுமாக பிடித்துள்ளதாக கூறபடுகிறது. இதனை தொடர்ந்து இது தொடர்ந்தால் விவாகரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை என ஐஸ்வர்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனையெடுத்து இனி இது போன்று நடங்காது என தனுஷ் உறுதியளிக்க. அப்படியானல் இனி எங்கே நீ வெளியில் சென்றாலும் உடன் நானும் வருவேன் என்றும், சென்னையில் படப்பிடிப்பு நடந்தால் இரவு வீட்டில் தங்க வேண்டும் நட்சத்திர விடுதியில் தங்க கூடாது என ஐஸ்வர்யா தெரிவிக்க அதற்கு தனுஷ் ஒப்புகொண்டுள்ளார். இதன் பின்பு கடந்த சில மாதங்களாக மனைவியுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொள்வது என பாட்டு படுவது, ஆட்டம் போடுவது என நகர்ந்தது தனுஷ் வாழ்கை.

ஆனால் “பழைய குருடி, கதவைத் திறடி” என்கிற பழமொழிக்கு ஏற்ப தனது மனைவி சற்று லூசில் விட மீண்டும் தனது சேட்டைகளை தொடங்கினர் தனுஷ் , இதை அறிந்த ஐஸ்வர்யா கணவர் தனுஷ் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதன் பின்பு ஏற்கனவே விதித்த கட்டுப்பாடுகளை விட இந்த முறை அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதித்து கடைபிடிக்க ஐஸ்வர்யா எல்லை மீறி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு தனுஷ் கட்டுப்படவில்லை.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா – தனுஷ் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதை தொடர்ந்து. உன்னை விவகாரத்து செய்துவிடுவேன் என ஐஸ்வர்யா மிரட்ட. நீ என்ன என்னை விவாகரத்து செய்வது, எனக்கு நீ தேவையில்லை என நானே உன்னை தூக்கி எறிகிறேன் என தனுஷ் தெரிவிக்க இனி இருவரும் இனைந்து வாழ்வது அர்த்தமில்லை என முடிவு செய்து இந்த விவகாரம் பொது வெளியில் விமர்சனத்துக்கு வந்தால் இரண்டு குடும்பத்துக்கு மன உளைச்சல் உண்டாகும் ஆகையால் நாகரிகமாக பிரிவது என முடிவெடுத்து தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிகள் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

யோவ் பாரதிராஜா.. எதுக்குய்யா இந்த மானங்கெட்ட பொழப்பு.!உச்சக்கட்ட அவமானத்தில் பாரதிராஜா..!