அறிவாலயம் பக்கமே வர கூடாது..! பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவல்லி விரட்டியடிப்பா.? எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

திமுக ஆதரவாளராக செயல்பட்டு வருகின்றவர் பேச்சாளர் சுந்தரவல்லி, அநாகரிகமாக பேசுவது, உண்மைக்கு புறம்பாக தவறான தகவல்களை பேசி அதன் மூலம் வரும் எதிர்ப்புகளால் தன்னை பிரபலப்படுத்தி கொண்டு வருகின்றவர் சுந்தரவல்லி. இவர் தொலைபேசியில் பேசிய ஆபாச பேச்சு ஓன்று சமூக வலைதளத்தில் வைரலான பின்பு இவரை ஆபாச பேச்சாளர் என அடை மொழியுடன் எதிர் தரப்பில் இருப்பவர்கள் அழைக்க தொடங்கினார்கள்.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் யூ டுயூப் பிரபலங்கள், சமூக வலைதள பிரபலங்கள், திமுக ஆதரவு பத்திரிகையாளர்கள் என தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து புகைப்படம் எடுத்து அதை தாங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் முதல்வரிடம் ஒரு புகைப்படமாவது எடுத்து விட வேண்டும் என தவமாய் தவமிருந்து காத்திருந்த சுந்தரவல்லிக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என பல்வேறு வகையில் முயற்சி செய்த சுதரவல்லிக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன் பின்பு அறிவாலயத்தில் சந்திப்பதற்காக தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அறிவாலயத்தை தொடர்பு கொண்டு முயற்சி செய்துள்ளார். ஆனால் இதற்கான எந்த ஒரு பதிலும் அறிவாலயம் தரப்பில் இருந்து வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் கடந்த மாதம் யூ டுயூப் பிரபலங்கள் சந்திப்பு நடந்தது. இதன் பின்பு பிலிப் பிலிப் சேனலை சேர்ந்த நபர் முதல்வரை சந்தித்த புகைப்படம் வெளியான பின்பு அந்த நபர் மிக கீழ்தரமாக ஆபாசமாக பேசிய வீடியோக்கள் வைரலாகி முதல்வர் நேரில் அழைத்து சந்தித்த நபரின் லட்சணத்தை பாருங்கள் என பதிவுகள் செய்யப்பட்டது.இதன் காரணமாக தான் முதல்வரை சந்திக்க சுந்தரவல்லிக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அறிவாலயத்தில் தனக்கு தெரிந்த நபரை தொடர்புகொண்டு முதல்வருடன் சந்தித்து புகைப்படம் எடுப்பது குறித்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருந்தேன் என கேட்க, அதற்கு உங்கள் மீது ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருக்கிறது நீங்கள் முதல்வரை சந்தித்து புகைப்படம் எடுத்தால் அது சமூக வலைதளத்தில் முதல்வருக்கு எதிராக அமைந்துவிடும் என்றும் அறிவாலயம் பக்கமே வந்துவிட வேண்டாம் என மறைமுகமாக சுந்தரவல்லியிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.