முடிந்தது பேச்சுவார்த்தை… பாஜகவில் இணைகிறார் ஜி.கே.வாசன்.! என்ன பொறுப்பு தெரியுமா.?

0
Follow on Google News

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி 1996ம் ஆண்டு திமுக ஆட்சி அமைவதர்க்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜி.கே.மூப்பனார். தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு அடுத்ததாக முன்றாவது பெரிய கட்சியாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.மூப்பனார் மறைவுக்கு பின்பு அவரது மகன் ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தார்.

அடுத்த 12 வருடங்களில் 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கிய ஜி.கே.வாசன், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்று இருந்தார். இதன் பின்பு 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம் பெற முக்கிய பங்காற்றியது பாஜக தான் என அப்போது கூறப்பட்டது.

மேலும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு இருந்தே பாஜகவுடன் நட்புறவை ஏற்படுத்தி கொண்டுள்ளார் ஜி.கே.வாசன் அதன் காரணமாக தான் அவர் அதிமுக கூட்டணியில் இடம்பெற எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம் இல்லை என்றால் கூட பாஜகவின் முயற்சியால் கூட்டணியில் இடம்பெற்றார் ஜி.கே.வாசன், அதே போன்று 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு ஜி.கே.வாசன் அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக பாஜக தான் காரணம் என கூறபடுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஜி.கே.வாசன் பாஜகவில் இணைந்து விடுவார் என பரவலாக செய்தி வெளியாகி வரும் நிலையில், தற்போது அதற்கான பேச்சு வார்த்தை முடித்துளள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்யசபா உறுப்பினரான ஜி.கே.வாசன் அடிக்கடி டெல்லி சென்று வருகின்றவர். இந்நிலையில் ராஜ்ய சபா உறுப்பினராக பொறுப்பேற்ற பின்பு டெல்லியில் உள்ள பாஜக முக்கிய தலைவர்களிடம் தனது நட்பை வலுப்படுத்தி கொண்டார் ஜி.கே.வாசன்.

இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் உள்ள பாஜக முக்கிய தலைவர் ஒருவர் ஜி.கே.வாசன் பாஜகவில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் 2001ம் ஆண்டு சோனியா தலைமையில் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை இணைத்தது போன்று பாஜகவுடன் மிக பிரமாண்ட முறையில் இணைக்க ஜி.கே.வாசன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு டெல்லி பாஜகவும் பச்சை கொடி காட்டியுள்ளது.

இந்நிலையில் விரைவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணையும் விழா தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் என்றும், இதன் பின்பு பாஜகவில் முக்கிய பொறுப்பு ஜி.கே.வாசனுக்கு வழங்கப்படும் என கூறப்படும் நிலையில். விரைவில் ஜி.கே.வாசன் பாஜகவில் இணைவது உறுதி என டெல்லி அரசியல் வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது குறிப்பிடதக்கது.