வம்பில் மாட்டிய பரிதாபம்…. சீப்பு செந்திலுக்கு தேவையா இது.! தரமா வெச்சு செஞ்ச கிஷோர் கே சாமி..!

0
Follow on Google News

நியூஸ் 18 தொலைக்காட்சியில் நெறியாளராக செந்தில் பணியாற்றிய போது. இந்திய – சீன பிரச்சனையில் சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் தடை விதித்தது மத்திய அரசு. அப்போது தனது டிவீட்டர் பக்கத்தில் சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று போய் விடுமா.? என இந்திய அரசை நக்கல் செய்யும் விதத்தில் கருத்து பதிவு செய்து சீப்பு செந்தில் என அழைக்கப்பட்டார். அதன் பின்பு நியூஸ் 18 தொலைக்காட்சியில் இருந்து வெளியேறினார் சீப்பு செந்தில்.

இந்நிலையில் மாரிதாஸ்,கிஷோர் கே சாமி ஆகியோர் கைது செய்த போது கருத்து தெரிவித்து வந்த சீப்பு செந்தில் இவர்கள் விடுதலையான பின்பு அவர்கள் பற்றி வாய் திறக்கவில்லை. இந்நிலையில் தனியாக யூ டுயூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் செந்தில், அவ்வப்போது மாலை முரசு தொலைக்காட்சியில் நெறியாளராக பங்கேற்பார். இந்நிலையில் கிஷோர் கே சாமி குறித்து மாலை முரசு செய்தியில் ஒரு வீடியோ ஓன்று வெளியானது.

அதில் கிஷோர் கே சாமி பட்டும் திருந்தவில்லை என்றும். அதில் அறம் பற்றி குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்து, அறம் என்கிற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவது செந்தில் என்பதால், அவர் வலியுறுத்தலின் பேரில் தான் இந்த கட்டுரை மற்றும் வீடியோ மாலை முரசில் வெளியிடப்பட்டுள்ளது என விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள கிஷோர் கே சாமி, மாலை முரசு அறம் பற்றி பேசி என்னை கேள்வி கேட்டிருப்பது சரி , அதற்கு நான் பதில் அளிக்கிறேன் ,

அதே சமயத்தில் மாலை முரசின் தலைமை செய்தியாளர் கணேஷ் மரியதாஸ் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் வீடு ஒன்றை பத்திரிக்கையாளர் கோட்டாவில் எடுத்து அதற்கு ஒன்றரை ஆண்டுகளாக வாடகையும் கட்டாமல் வைத்திருப்பதாக வரும் செய்தி உண்மையா ? உண்மையெனில் , அது என்ன மாதிரி அறம் , வாடகை பாக்கியை அரசாங்கம் வசூல் செய்யாததன் காரணம் என்ன ? அரசாங்கத்திற்கு சாதகமாக நடந்துக் கொண்டால் சலுகைகள் என்பதாலா ?

கணேஷ் மரியாதாசுக்கு சம்பளமே மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் என்கிற பொழுது , எதற்காக அரசாங்கத்தின் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு ? ஏழை பத்திரிகையாளர்கள் எத்தனையோ பேர் மேன்சன்களில் தங்கி கஷ்டப் படும் நிலையில் , இந்த ஊடக முதலைகளுக்கு எதற்காக சலுகைகள் ? நாங்களும் கேட்போமுல்ல என கிஷோர் கே சாமி தரமான பதிலடி கொடுத்துள்ளது. நெறியாளர் செந்தில் மாலை முரசில் கிஷோர் குறித்து செய்தி வெளியிட தூண்டிவிட்டு பாவம் அதன் தலைமை செய்தியாளர் கணேஷ் மரியதாஸை சிக்கலில் சிக்க வைத்துள்ளார் என நெட்டிசன்கள் தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.